தினமலர்,பசுமை ராமேஸ்வரம் நடத்தும் ரங்கோலி போட்டி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர்,பசுமை ராமேஸ்வரம் நடத்தும் ரங்கோலி போட்டி

Added : ஜன 16, 2020
Share

ராமேஸ்வரம் : தினமலர், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு இணைந்து இன்று (ஜன.,17) ராமேஸ்வரம் கோயில் கல்யாண மண்டபத்தில் ரங்கோலி போட்டி நடத்தப்படவுள்ளது.

சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு திருக்கல்யாண மண்டபத்தில் தினமலர், பசுமை ராமேஸ்வரம் இணைந்து பெண்களுக்கு பிடித்த ரங்கோலி போட்டி இன்று நடக்க உள்ளது. பலவண்ண கலரில், வித விதமான கோலங்கள் வடிவமைத்து பரிசுகள்பெறலாம்.போட்டியில் பங்கேற்கும் பெண்கள் கலர் பொடியுடன் காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் முன் பதிவுசெய்ய வேண்டும். பின் காலை 10:30 முதல் 11:30 மணிக்குள் போட்டி நடக்கும். போட்டியில் முதலிடம்பெறும் 3 பேர், 2ம் இடம் பிடிக்கும் 10 பேர், 3ம் இடம் பிடிக்கும் 5 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசு உண்டு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X