சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறையில் பயங்கரவாதிகள்: 13 மணி நேர விசாரணை

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (3)
Advertisement
சிறையில் பயங்கரவாதிகள்: 13 மணி நேர விசாரணை

நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் எஸ்.ஐ., வில்சனை கொலை செய்த பயங்கரவாதிகள் இருவரிடமும் நேற்று தக்கலையில் விசாரணை நடந்தது. இரவு வரை நீண்ட விசாரணையில் தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் பங்கேற்றனர்.எஸ்.ஐ., வில்சன் ஜன.8 இரவு 9:30 மணிக்கு சுட்டுக்கொல்லப்பட்டார். நாகர்கோவில் இளங்கடை தவுபிக் 28, திருவிதாங்கோடு அப்துல்சமீம் 32, ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரிந்தது. இவர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்தனர்.கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேற்று முன்தினம் காலையில் தவுபிக், அப்துல் சமீம் சிக்கினர். இவர்களை எஸ்.பி., ஸ்ரீநாத் தலைமையில் குழுவினர் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு களியக்காவிளை அழைத்து சென்றனர். அங்கு இரண்டு மணி நேரம் விசாரணை நடந்தது. காலை 7:00 மணிக்கு தக்கலை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்லப்பட்டனர்.இங்கு இரவு வரை விசாரணை நடந்தது. எஸ்.பி., ஸ்ரீநாத் விசாரித்த நிலையில் மதியம் டி.ஐ.ஜி., பிரபின் குமார் அபினவ் வந்தார். தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகளும் விசாரித்தனர். குடியரசு தினவிழாவில் அசம்பாவிதம் நடத்த திட்டமிடப்பட்டதா என இரவு வரை விசாரணை நீண்டது.'எங்களை கொன்று விடுங்கள்'விசாரணையில் பயங்கரவாதிகள் தெரிவித்தது குறித்து போலீசார் கூறியதாவது:'தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி அல் உம்மா போன்ற இயக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். இஸ்லாமிய இயக்கத்தினரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். அதற்கு பழிவாங்கும் வகையில்தான் வில்சனை கொலை செய்தோம். இவ்வாறு செய்வதால் இஸ்லாமிய இயக்கங்களில் எங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என நினைத்தோம். எங்களை கொன்று விடுங்கள். அல்லா எங்களை ஏற்றுக் கொள்வார்' என இருவரும் கூறினர்.விசாரணையின் போது அவர்களிடம் பதட்டமோ, கவலையோ இல்லை. ஆனால் இறுக்கமாக இருந்தனர்.இவ்வாறு கூறினர்.சிறையில் பயங்கரவாதிகள்தக்கலை ஸ்டேஷனில் 13 மணி நேர விசாரணைக்கு பின் தவுபிக், சமீம் இருவரும் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஜன.20 வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின் நெல்லை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதுகுறித்து டி.ஐ.ஜி., பிரபின் குமார் அபினவ் கூறியதாவது:கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி பறிமுதல் செய்யப்படவில்லை. சமீம் மீது கொலை முயற்சி உட்பட 16 வழக்குகள் உள்ளன. இவர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளதா என விசாரிக்கிறோம், என்றார்.இந்நிலையில் விசாரணைக்காக இருவருக்கும் போலீஸ் காவல் வழங்கக்கூடாது என நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் அப்துல் நிஜாம், அக்மல் ஹசாலி ஆகியோர் மாஜிஸ்திரேட்டிடம் மனுதாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஒரு தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மோதல் ஏற்பட்டது. இதில் அப்துல் நிஜாம், அக்மல் ஹசாலி வந்த கார் நொறுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
17-ஜன-202012:55:16 IST Report Abuse
RajanRajan எங்களை கொன்று விடுங்கள். அல்லா எங்களை ஏற்றுக் கொள்வார்' என இருவரும் கூறினர் - திராவிட பகுத்தறிவு கூடம் இப்படி சொல்பவர்களிடம் எப்படி அறியாமை கஞ்சி காய்ச்சுறாங்கன்னு பார்க்கோணும்.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-ஜன-202008:44:50 IST Report Abuse
வல்வில் ஓரி கொலையாளிகளாக இருந்தால் தான் ஏற்பானா?
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
17-ஜன-202008:31:24 IST Report Abuse
வல்வில் ஓரி வக்கீல்களை பாருங்க இது மதவாதம் இல்லாமல் வேறென்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X