சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி பெண் யானை பலி

Added : ஜன 16, 2020
Advertisement

சத்தியமங்கலம், தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தில், மின் வேலியில் சிக்கி, பெண் யானை உயிரிழந்தது.ஈரோடு மாவட்டம், தாளவாடி, அடுத்த திகினாரை கிராமம், ஜீரகள்ளி வனப் பகுதியை ஒட்டி, ரங்கசாமி என்பவரது தோட்டம் உள்ளது. நேற்று காலை, ரங்கசாமி, தோட்டத்திற்கு சென்ற போது, யானை ஒன்று இறந்து கிடந்தது.ஜீரகள்ளி வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனத் துறையினர் விசாரணையில், ரங்கசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி, யானை உயிரிழந்தது தெரிந்தது.'இறந்த பெண் யானைக்கு, 30 வயது இருக்கும்' என வனத்துறையினர் தெரிவித்தனர். ரங்கசாமியிடம் தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X