கிளம்பிட்டாங்க

Added : ஜன 16, 2020
Advertisement

காதல் பறவைகள்!

காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகள், பறவைகள் என எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது என்பதை உணர்த்தும் வீடியோ ஒன்று வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.ஒரே இனத்தை சேர்ந்த பறவைகள் காதல் கொள்வது இயல்பு இந்த வீடியோவில் கிளியும் ஆந்தையும் கொஞ்சிக் கொள்ளும் காட்சி வெகுவாக கவர்ந்துள்ளது.அதிலும் கிளி, ஆந்தையின் அருகே சென்று அதன் இறகை பிடிப்பு இழுப்பதும் இறகை வருடி விடுவது போன்ற காட்சிகள் பலரையும் மெய்சிலிர்க்க செய்துள்ளது.ஓட்டுனரே இது நியாயமா!பழநியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருக்கிறது. அதனை ராமகிருஷ்ணன் என்ற ஓட்டுனர் ஓட்டிச் செல்கிறார். ஒருகட்டத்தில் தனது அலைபேசியில் வாட்ஸ் ஆப் பார்த்துக் கொண்டே பஸ்சினை வேகமாக இயக்குகிறார். ஓட்டுனரின் அலட்சியமான இந்த செயலை பயணி ஒருவர் தனது அலைபேசியில் வீடியோவாக பதிவு செய்தார். தற்போது வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நல்லா யோசிக்கிறாங்கய்யா!

நெருங்கிய நண்பனின் திருமணம் என்றாலே சக நண்பர்கள் செய்யும் அட்டகாசத்துக்கு அளவே இருக்காது. அப்படி ஒரு கலகலப்பான வீடியோ ஒன்று நெட்டிசன்களை சிரிப்பலையில் ஆழ்த்தி வருகிறது.வீடியோவில் நண்பர்கள் சிலர் மேடையில் நிற்கும் மணமக்களுக்கு பெரிய பார்சல் கிப்ட் ஒன்றை பரிசாக வழங்குகின்றனர். அதனை மணமகன் பிரித்து பார்த்தபோது வடிவேலு டவுசர் பாக்கெட்டில் ஒன்னும் இல்லையே என்று எடுத்துக்காட்டும் நகைச்சுவையான புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதை பார்த்து சுற்றியிருந்த நண்பர்கள் மட்டுமல்லாது மணமக்களும் வாய் விட்டு சிரித்து மகிழ்கின்றனர்.

பிளாஸ்டிக் கட்டடம்!

தென்னாப்ரிக்க கேப்டவுனில் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்கும் நோக்கில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டட வேலைகளில் பயன்படுத்தி வருகிறது. பொதுஇடங்களில் கிடைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேமித்து அதில் குப்பைகளை நிரப்புகின்றனர். பின்னர் அதனை வெவ்வேறு அளவுகளில் வைத்து சுவர்களாக வடிவமைக்கின்றனர். இந்த காட்சிகள் வலைதளங்களில் வைரலாகி லைக்குகளை அள்ளி வருகிறது.துவம்சம் செய்த புயல்!அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தின் கிளிண்டன் நகரில் உள்விளையாட்டு அரங்கம் ஒன்று உள்ளது. இங்கு அண்மையில் மணிக்கு 136 கி.மீ.வேகத்தில் புயல் காற்று வீசியது. இதனால் அரங்கின் கண்ணாடி பொருட்கள் மற்றும் கதவுகளை சுழல் காற்றில் சிக்கி வீசி எரியப்பட்டன. இந்த எதிர்பார விபத்தில் அரங்கில் கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாட்டு பாடும் நாய்!

பிரபல பாடகி ரானு மோன்டால் பாடிய 'தேரி மேரி கஹாணி...' என்ற இந்தி பாடலை ஆர்மோனியத்துடன் ஒருவர் பாடுகிறார். அப்போது அவரது வளர்ப்பு நாயும் இணைந்த பாடுகிறது. அவர் ராகத்தை இழுக்கும்போது நாயம் அதேபாணியில் ஊளையிட்டு பாடுகிறது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வலைதளங்களில் டிரெண்டாக பரவி வருகிறது. லைக் மற்றும் கமெண்ட்டுகள் மூலமாக செல்லப்பிராணி நாய்க்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X