பொது செய்தி

தமிழ்நாடு

காலத்தை வென்றவர்... காவியமானவர்: இன்று எம்.ஜி.ஆர்., பிறந்த தினம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (11)
Advertisement
MGR, காலத்தைவென்றவர்,காவியமானவர்,எம்ஜிஆர், பிறந்ததினம்,

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்த தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இலங்கையின் கண்டியில் 1917 ஜன., 17ல் பிறந்தார். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். தந்தையின் வேலை நிமித்தமாக கேரளாவில் குடியேறினார். தந்தை மறைவுக்கு பின், தாய்மற்றும் சகோதரருடன் தமிழகத்தின் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தார். வறுமையால் படிப்பை தொடர முடியாமல் தவித்த எம்.ஜி.ஆர்., வருமானத்திற்காக சகோதரர் சக்ரபாணியோடு இணைந்து நாடகங்களில் நடித்தார்.

அயராத உழைப்பு, கவர்ந்திழுக்கும் சிரிப்பு, கனிவான பார்வை, கருணை உள்ளம், உயர்ந்த
கருத்துக்களை மட்டுமே பிரதிபலிக்கும் பிடிவாதம் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலித்தார். சினிமாக்களில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதையும், நல்வழிப்படுத்துவதையும் ஒரு கொள்கையாக கொண்டிருந்தார்.


சினிமாவில் வெற்றிக்கொடிஎம்.ஜி.ஆர்., நடித்த முதல் படம் 'சதிலீலாவதி', 1936ல் வெளிவந்தது. 1947ல் வெளிவந்த
'ராஜகுமாரி' படம் புகழை ஈட்டித் தந்தது. 1971ல்'ரிக் ஷாக்காரன்' படத்திற்காக சிறந்த
நடிகருக்கான 'தேசிய விருது' பெற்றார். நாடோடிமன்னன், அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய படங்களை தயாரித்தார். அவர் நடித்த 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' திரைப்படம் மூலம் அரசியல்வாதியாக தன்னை அடையாளம் காட்டினார்.


அரசியல் களம்

தி.மு.க., வின் உறுப்பினர், பொருளாளராக பணியாற்றினார். 1967ல் எம்.எல்.ஏ., ஆனார்.
அண்ணாதுரை மறைவுக்குப்பின், அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட தி.மு.க.,வில் இருந்து விலகினார்.


தமிழக முதல்வர்பின் 1972 அக்.,17ல் அ.தி.மு.க.,வை தொடங்கினார். போட்டியிட்ட முதல் சட்டசபை தேர்தலில் (1977) இவரது கட்சி வெற்றி பெற்றது. எம்.ஜி.ஆர்., முதல்வரானார். 1980ல் இரண்டாவது முறை முதல்வரானார். 1984 தேர்தலில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் பிரசாரத்தில் ஈடுபட முடியா
விட்டாலும், மக்களிடம் பெற்றிருந்த செல்வாக்கால் வெற்றி பெற்று மூன்றாவது முறை
முதல்வரானார். 1987வரை 10 ஆண்டுகள் தொடர்ந்துமுதல்வராக இருந்த இவர்,பதவியில்
இருக்கும் போதே உடல்நலக்குறைவால் 1987டிச., 24ல் மறைந்தார்.
பாரத ரத்னாசத்துணவு திட்டம், இலவச வேஷ்டி சேலை போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை எம்.ஜி.ஆர்., அறிமுகப்படுத்தினார். மறைவுக்குப் பின் இவருக்கு, 1988ல் நாட்டின் உயரிய
'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.


நடிகர் டூ முதல்வர்இந்தியாவில் முதன்முதலாக நடிகராக இருந்து முதல்வரானவர் இவரே.


தமிழுக்கு சிறப்புஎம்.ஜி.ஆர்., தமிழ் மொழி வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை நடத்தினார்.


Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
18-ஜன-202001:35:32 IST Report Abuse
dandy இன்னும் 1000 வருடங்களுக்கு பின்னரும் இந்த மா மனிதர் பற்றி மக்கள் பேசுவார்கள் ..தமிழனாக இல்லாவிட்டாலும் ..தமிழன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்த பெரு மகன் ......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜன-202016:55:06 IST Report Abuse
Endrum Indian வாழ்க வாழ்க வாழ்க
Rate this:
Share this comment
Cancel
Paramasivam Murugappan - Chennai,இந்தியா
17-ஜன-202010:59:41 IST Report Abuse
Paramasivam Murugappan அப்போதைய முதல்வர் கருணாநிதியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட தி.மு.க.,வில் இருந்து விலக்கப்பட்டார், வாழ்க அவர் புகழ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X