அணு ஆயுத தயாரிப்புக்கு கட்டுப்பாடு இல்லை: ஈரான்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (13)
Advertisement
Iran,US,America,அதிபர், ரவுகானி

டெஹ்ரான், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில், ''அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளை அதிக அளவில் மேற்கொள்வோம்; இதற்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை,'' என, ஈரான் அதிபர் ரவுகானி தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடான ஈரானின் ராணுவ தளபதி சுலைமானியை, ஏவுகணை தாக்குதல் நடத்தி, அமெரிக்க ராணுவம் சமீபத்தில் கொன்றது. இதற்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது, ஈரான், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.





இந்நிலையில், ஈரான் அதிபர் ரவுகானி கூறுகையில், ''அணு ஆயுதம் தயாரிக்க பயன்படும் யுரேனியத்தை செறிவூட்டும் பணிகளிலும், ஆராய்ச்சியிலும் அதிக அளவில் ஈடுபட உள்ளோம். அணு ஆயுதங்கள் தயாரிப்புக்கு, எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை,'' என்றார்.

அணு ஆயுத தயாரிப்பை கட்டுப்படுத்துவது தொடர்பாக, 2015ல், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், விதிமுறைகளை மீறி, ஈரான் செயல்படுவதாக கூறி, 2018ல், இந்த ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது, அணு ஆயுத தயாரிப்பில், ஈரான் தீவிரம் காட்டத்துவங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202015:17:20 IST Report Abuse
தமிழ்வேல் இஸ்ரேலை இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தோன்றுகின்றது.
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-202013:36:02 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஒற்றுமை இல்லை , ஆகவே அமெரிக்கா இவர்களை வைத்து விளையாடுகிறது. மேலும் பணம் கொட்டிக்கிடந்தாலும் வளைகுடா நாடுகள் அறிவியலில் முன்னேறவில்லை , அது அமெரிக்காவிற்கு சாதகமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-ஜன-202011:00:09 IST Report Abuse
mindum vasantham மத்திய கிழக்கில் ஒரு ஆடு புலி ஆட்டம் நடை பெறுகிறது சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடம் , ஏமன் என்ற நாட்டில் இருவரும் வெவேறு ஆட்களை ஆதரிக்கின்றனர் அதே போல் தான் வேறு சில நாடுகளிலும் , இதில் அமெரிக்கா சவூதி கூட்டணி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X