சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'போக்சோ' சட்டத்தில் இருவர் கைது

Added : ஜன 17, 2020
Share
Advertisement
 'போக்சோ' சட்டத்தில் இருவர் கைது

புளியந்தோப்பு: ஓட்டேரி, கொன்னுார் நெடுஞ்சாலையைச் சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியில், கொத்தனார் வேலை பார்க்கும் செல்வம், 32, என்பவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரித்த போலீசார், செல்வத்தை, 'போக்சோ' சட்டத்தில், நேற்று கைது செய்தனர்.
ஆவடி: ஆவடி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மர்ம நபர் ஒருவர், 14ம் தேதி, 6 வயது சிறுமியிடம் அன்பாக பேசியுள்ளார். ஆசைவார்த்தை கூறி கழிப்பறைக்கு அழைத்துச் சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், அந்த நபரை கைது செய்யக்கோரி, ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வருவதை அறிந்த அந்த மர்மநபர் வீட்டை பூட்டி, குடும்பத்தோடு தப்பி ஓடினார். தலைமறைவான அந்த நபரை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
பட்டாபிராம்: பழவேற்காடு, காடபக்கத்தைச் சேர்ந்தவர் சுடர்மணி, 19; கார் ஓட்டுனர். இவர், 16 வயது சிறுமியை ஓராண்டாக காதலித்து வந்துள்ளார். சிறுமி, சுடர்மணியிடம் பேசுவதை தடுக்க அவரது பெற்றோர் பட்டாபிராமில் உள்ள தங்களது உறவினரான மீனா, 45, என்பவரது வீட்டில் தங்கி, படிக்க வைத்தனர்.இந்நிலையில் சிறுமி அங்கிருந்து, 9ம் தேதி மாயமானார். பட்டாபிராம் போலீசார் விசாரித்தனர். இதில் சுடர்மணி, சிறுமியுடன் ஆந்திர மாநிலம், காளஹஸ்தி பகுதியில் இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்து அவர்களை வரவழைத்து நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி, ஐந்து மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. சுடர்மணியை, பட்டாபிராம் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
12 பேருக்கு, ' குண்டாஸ்'
சென்னை: பள்ளிக்கரணை பவானி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 27. இவரது கூட்டாளி கலையரசன், 24, உட்பட, நான்கு பேர் மீது கொலை முயற்சி வழக்கு உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஷியாம் குர்ஜார், 23, மற்றும் மகேஷ் சவுத்ரி, 24, ஆகியோர் மீது, திருட்டு வழக்குகள் உள்ளன. நெற்குன்றம் தனஞ்செழியன், 36, மற்றும் மதுரவாயல் சதீஷ், 28, ஆகியோர் மீது வழிப்பறி வழக்குகள் உள்ளன. இவர்கள் உட்பட, 12 பேர் தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை, கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்படி, போலீசார் நேற்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
புடவை திருடிய பெண் சிக்கினார்
ஆவடி: ஆவடி, ஜெ.பி., எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ், 32. அதே பகுதியில் துணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு, 14ம் தேதி இரவு, துணி வாங்குவதற்காக ஒரு பெண் சென்றார். சிறிது நேரம் கடையை சுற்றிப்பார்த்த அவர், துணிகள் ஏதும் வாங்காமல் சென்றார்.நுழைவு வாயிலில், அவரது உடைமைகளை சோதித்து பார்த்தபோது, 3,000 ரூபாய் மதிப்புள்ள புடவையை, அந்த பெண் திருடிச் சென்றது தெரிந்தது. விசாரணையில் ஆவடியைச் சேர்ந்த கோமதி, 40, என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X