அரச பணியில் இளவரசர் ஹாரி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (3)
Advertisement
PrinceHarry,British_royal_family,Meghan,Harry,British,இளவரசர், ஹாரி

லண்டன் : அரசப் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள, ஐரோப்பிய நாடான பிரிட்டன் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த, இளவரசர் ஹாரி, தன் அரசப் பணியில் ஈடுபட்டார்.

பிரிட்டன் அரசக் குடும்பத்தில் இருந்து விலகுவதாக, இளவரசர் ஹாரி, அவருடைய மனைவியும், முன்னாள் அமெரிக்க நடிகையுமான மேகன், சமீபத்தில் அறிவித்தனர். இது அரசக் குடும்பத்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தப் பிரச்னை குறித்து, ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் ஹாரியுடன் பேச்சு நடத்தினார். அதையடுத்து சமரசம் ஏற்பட்டது.





அரசப் பணிகளில் இருந்து விலகுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள ராணி, அதற்கான நடைமுறைகள் முடியும் வரை, அரசப் பணியை தொடரும்படி கூறியுள்ளார். அதன்படி, இளவரசர் ஹாரி, தனது அரசப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதனால், மனைவி மேகன் மற்றும் மகனை சந்திக்க வட அமெரிக்க நாடான கனடாவுக்கு தற்போதைக்கு செல்ல மாட்டார் என, தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
17-ஜன-202010:51:51 IST Report Abuse
Girija எல்லாம் நம்ப வடிவேலு காமெடிதான் வெளியே போனா அஞ்சுக்கு, பத்துக்கும் சோத்துக்கும் பிச்சையெடுக்கணும், மேகன் கவுனை துவைத்து போடணும்னு பாட்டி சொன்னதை கேட்டு இங்கையே செட்டில் ஆகிவிட்டார் .
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
17-ஜன-202005:55:04 IST Report Abuse
blocked user சிறகுகளை இப்பொழுதைக்கு வெட்டி விட்டுள்ளார்கள் போல.
Rate this:
Share this comment
Cancel
Agni Kunju - Singapore,சிங்கப்பூர்
17-ஜன-202003:43:49 IST Report Abuse
Agni Kunju அப்படி என்ன பணிய ராணி வீட்டு கன்னுக்குட்டி பண்ணப்போகுது? டேய்யப்பா.. மாச்சம்பளத்துக்கு பணிசெஞ்சு சம்பளம் வாங்குனவன் பாடுன்ன்னு இவங்களுக்கு தெரியுமா? இல்லப்புரியுமா? வாங்கப்பப்பா வேலையப்பாப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X