இந்திராவை பற்றி அவதுாறு: 'வாபஸ்' பெற்றார் ராவத்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (29)
Advertisement

மும்பை: முன்னாள் பிரதமர் இந்திரா, மும்பை நிழல் உலக தாதாவை சந்தித்ததாக, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்த கருத்துக்கு, காங்., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தான் கூறிய கருத்தை, அவர், 'வாபஸ்' பெற்றார்.







கண்டனம்


மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது:மும்பை நகரம், ஒரு காலத்தில், தாதாக்களின் பிடியில் இருந்தது. கடந்த, 1960களில் துவங்கி, 1980களின் துவக்கம் வரை, வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான், கரீம் லாலா ஆகிய தாதாக்கள் கோலோச்சினர். ஒருமுறை, மும்பையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு ஹாஜி மஸ்தான் வந்தபோது, தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லாரும், அவரை பார்ப்பதற்காக திரண்டனர். முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான இந்திரா கூட, நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கு, காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கட்சியின் மூத்த தலைவர்களான மிலிந்த் தியோரா, சஞ்சய் நிரூபம் ஆகியோர், 'உண்மையான தேசபக்தரான இந்திராவை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்தை, சஞ்சய் ராவத் வாபஸ் பெற வேண்டும்' என்றனர். இதையடுத்து, தான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக, சஞ்சய் ராவத் தெரிவித்தார். அவர் கூறியதாவது:முன்னாள் பிரதமர் இந்திரா பற்றி, நான் தெரிவித்த கருத்து, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால், நான் தெரிவித்த கருத்தை வாபஸ் பெறுகிறேன்.






எதிர்ப்பு


இந்திராவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சிலர் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தனர்.அப்போதெல்லாம், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தவன் நான். காங்கிரசைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் அமைதியாக இருந்தபோது, நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-ஜன-202015:17:16 IST Report Abuse
ஆரூர் ரங் அடுத்து இந்திரா காந்தி - தீரேந்திர பிரம்மச்சாரி சந்திப்புகளைப் பற்றி சொல்வார். என ஆவலுடன் எதிர்பார்க்கலாம் ஏண் கூட்டணி சேர்ந்தோம்னு ஆகணும்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
17-ஜன-202013:35:53 IST Report Abuse
Indhuindian வாபஸ் வாங்கினா என்ன? நடந்தது உண்மைதானே அதைத்தானே சொன்னார் உங்களுக்கு வேணா அது பிடிக்காதா போகலாம் அல்லது சங்கடமாக இருக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-202011:31:14 IST Report Abuse
  karthik உண்மைய சொன்னா காங்கிரஸ் ஒத்துக்கனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X