பொது செய்தி

இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (2)
Advertisement
GSAT30,Ariane5,VA251,ஜிசாட்,ஏரியன்5,பிரென்ச்கயானா,இஸ்ரோ

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: இந்தியாவின் 'தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், இன்று(ஜன.,17) அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

தென் அமெரிக்காவில், பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளம். இங்கிருந்து, 'ஜிசாட் - 30' மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், 'இடுல்சாட் கோனக்ட்' செயற்கைக் கோள்களுடன், 'ஏரியன் - 5' ராக்கெட், இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.





மொத்தம், 3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் - 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான 'டி.டி.எச்., விசாட்' மற்றும், 'டிஜிட்டல்' சேவைகளுக்கு உதவும். இதன், 'கியூ பேண்டு' டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், 'சி பேண்டு' டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.

ஜிசாட்-30 செயற்கைக்கோள், 15 ஆண்டுகள் இயங்கும் வகையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஜன-202009:22:13 IST Report Abuse
ரத்தினம் வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Samy Chinnathambi - rayong,தாய்லாந்து
17-ஜன-202006:26:58 IST Report Abuse
Samy Chinnathambi வாழ்த்துக்கள்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X