பா.ஜ., தேர்தல் செலவு ரூ.1,264 கோடி: காங்., செய்த செலவு ரூ.820 கோடி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
BJP,BharatiyaJanataParty,Congress,காங்கிரஸ்,பாஜ,election,தேர்தல், செலவு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தல்களுக்கு, 1,264 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக, பா.ஜ., தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.


பா.ஜ., தாக்கல்:


ஒவ்வொரு முறையும் தேர்தல் நடக்கும் போது, அதற்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்ற விபரத்தை, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் ஒவ்வொரு ஆண்டும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விபரம், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.


latest tamil news



இதன்படி, கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தல், ஏப்ரல், மே மாதங்களில் நடந்த, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் செய்யப்பட்ட செலவு குறித்த விபரத்தை, பா.ஜ., தாக்கல் செய்துள்ளது. இதில், இந்த தேர்தலுக்காக, 1,264 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ., 714 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது.


latest tamil news




ரூ.516 கோடி:


கடந்தாண்டு செய்யப்பட்ட செலவுகளில், ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்காக மட்டும், 325 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், லோக்சபா தேர்தல் மற்றும் நான்கு மாநில சட்டசபை தேர்தலுக்கு, 820 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது. இதற்கு முந்தைய லோக்சபா தேர்தலுக்கு, காங்கிரஸ், 516 கோடி ரூபாய் செலவு செய்திருந்தது. இந்த தகவல், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஜன-202016:19:50 IST Report Abuse
Endrum Indian அது எப்படி???303 பி ஜெ பி எம் பி அப்போ ரூ 1264 /303 என்று வைத்துக்கொண்டால் கூட ரூ 4 கோடி ஒரு எம் பிக்கு. முஸ்லீம் நேரு காங்கிரஸ் 820 /52 = ரூ 16 கோடி என்று வருகின்றது. 4 மடங்கு. அதுக்குத்தான் இந்த வயித்தெரிச்சலில் தினம் தினம் முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரஸ் உளறுவதில் ஒரு நேபல் பரிசு இருந்தால் கிடைக்கும் அளவுக்கு உளறுகின்றதா???அப்போ சரி உளறு பப்பூவே
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),இந்தியா
17-ஜன-202021:16:46 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு இப்படி பாருங்கள் மோடியின் ஒரு மீட்டிங்கிற்கு 20 கோடி செலவு ஆகிறது 400 மீட்டிங் / 8000 கோடி செலவு ஒரு நேர்மை கட்சி எப்படி இவளவு செலவு செய்ய முடிகிறது ????...
Rate this:
Share this comment
Cancel
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
17-ஜன-202015:38:08 IST Report Abuse
Vmmoorthy Moorthy இவ்வளவு செலவு செய்து நாட்டுக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள் இவர்களை நம்பி மக்கள் ஓட்டும் போடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
17-ஜன-202009:51:00 IST Report Abuse
Sampath Kumar காசுக்கு தகுந்த தோசை கிடைத்து விட்டது என்று சொல்கிறீர்கள் ஓகே ஓகே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X