பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூரில் சீறும் காளைகள்: மடக்கும் காளையர்கள்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (3)
Advertisement
Alanganallur,Jallikattu,அலங்காநல்லூர்,ஜல்லிக்கட்டு

இந்த செய்தியை கேட்க

அலங்காநல்லூர்: உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கடடு துவங்கியது.அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெறற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.முதல் மரியாதை செய்யப்பட்ட 3 காளைகள் முதலில் அவிழ்த்துவிடப்பட்டன.





ஜல்லிக்கட்டில், 700 காளைகள், 921 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். போட்டி துவஙகும் முன்னர் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் கோயில் காளைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது. பின்னர், கலெக்டர் உறுதிமொழி வாசிக்க, வீரர்கள் அதனை ஏற்று கொண்டனர். ஜல்லிக்கட்டை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கு, முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. 10 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை பார்க்கும் வகையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.





இந்த ஜல்லிக்கட்டில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்து வரும் சின்னகொம்பன், வெள்ளை கொம்பன், கருப்பு கொம்பன் என பெயரிடப்பட்ட காளைகளும் பங்கேற்றன. 3 காளைகளையும், மாடுபிடி வீரர்களால் பிடிக்க முடியவில்லை.


திண்டுக்கல், கரூரில் ஜல்லிக்கட்டு


திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே நத்தமாடிபட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் 500 காளைகள் , 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

திருச்சி, மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் 500 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

கரூர், குளித்தலை அருகே ராட்ச்சாண்டர் திருமலையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் 850 காளைகள், 450 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை வன்னியன்விடுதியில் அதிகாரிகள் தாமதமாக வந்ததால், ஜல்லிக்கட்டு தாமதமாக துவங்கியது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nesan - JB,மலேஷியா
17-ஜன-202012:39:57 IST Report Abuse
Nesan யார் யாரோ வந்து நேரலையில் ஜல்லிக்கட்டை பார்க்கிறேன் என்று சொல்லுகிறார்கள், நான் மேலே குறிப்பிட்ட விபரங்களை விழா குழுவினருக்கு எடுத்து சென்று தீர்வு காண்பார்களா?. உலகம் தமிழ் பாரம்பரிய விளையாட்டை பார்த்துக்கொண்டு இருக்கிறது. தினமலர் தீர்வுகாணும் என்று நம்புகிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
17-ஜன-202012:33:52 IST Report Abuse
Nesan உலகெங்கும் அலங்காநல்லூர் ஜல்லிகட்டை நேரலையில் பார்த்துக்கொண்டு இருக்கார்கள். மாடு அவிழ்த்துவிடும் இடத்திற்கு மேலே காலை தொங்க விட்டுக்கொண்டு இருப்பது அருவருப்பாகவும், ஆபத்தை விளைவிப்பதாகவும் இருக்கிறது. இதை அங்குள்ள .அமைச்சர் உதயகுமார், கலெக்டர் வினய், ஓய்வுபெறற நீதிபதி மாணிக்கம் ஆகியோர் கண்ணுக்கு தென்படவில்லையா?. கொடுக்கும் பரிசு பொருள்களை தூக்கி போடுகிரார்கள், கொடுக்கும் பரிசுகளை மரியாதையுடன் வழங்கவேண்டும் என்ற மரியாதைகூட தெரியவில்லை. வருணனை செய்பவர் வாய்க்கு வந்தமாதிரி பேசுகிறார். இதை எல்லாம் உலகத்தில் ஜல்லிக்கட்டை பார்த்து கொண்டு இருக்கும் அனைவரும் கவனித்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை விழாக்குழுவினருக்கு, நீதிபதி, மற்றும் பொறுப்பானவர்கள் மூலம் விழா குழுவினருக்கு தினமலர் எடுத்து செல்லுமா?. நேற்றைய பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசுகள் அலங்கோலம் வீசப்பட்டது என்பதை உலகம் அறியும். தமிழனின் பண்பாட்டை உலகம் பார்த்து கொண்டு இருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களை தொடர்பு கொள்ள, தொலைபேசி எண் தேடுகிறேன் கிடைக்கவில்லை. தினமலர் உதவி செய்து, தமிழன் மானத்தை காப்பாற்றுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
17-ஜன-202012:22:30 IST Report Abuse
SENTHIL ஜல்லிக்கட்டு..... சீறிவரும் காளைகள்.... சிங்கமென வீரர்கள்.... மற்ற நாடுகளை போல காளைகளை ஏமாற்றும் வித்தையில்லை... கண்ணுக்கு கண் நேராக... ஏறு தழுவுதல்... உலகில் யாருக்கும் உவமை காட்டமுடியாத தமிழரின் வீரம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X