பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவரை கேலி செய்யும் வீடியோ வெளியிட்டால் 5 ஆண்டு சிறை

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (21)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : ''குழந்தைகள், சிறுவர், சிறுமியர் தொடர்பாக, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில், குறும்புத்தனமான, வீடியோ வெளியிட்டாலும், ஐந்து ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும்,'' என, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு, கூடுதல் டி.ஜி.பி., ரவி எச்சரித்தார்.






சமீபத்தில் Funny pranksters என்ற யூடியூப் சேனல் ஒரு சிறுவனிடம் பிராங்க் என்ற பெயரில் அவனை அடித்து கரண்ட் கம்பத்தில் தொங்கவிடுவேன் என்றும், அவனின் உள்ளாடை நிறங்களை கேட்டும் ஆபாசமாக ஒரு பிராங்க் வீடியோவை வெளியிட்டு இருந்தது. குழந்தைகளின் ஆபாச படங்களுக்கு தடை என்பது பெரும் சர்ச்சையாக இருந்த நேரத்தில் இவ்வாறு ஆபாச வார்த்தைகளை பேசுவது மட்டும் சரியா என்ற சந்தேகம் எழுந்தது, இந்த வீடியோ பதிவை பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஏடிஜிபி ரவி ஐ.ஏ.எஸ்யிடம் காட்டினோம் :

அவர் அளித்த பேட்டி:குழந்தைகள் மற்றும் 18 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர்கள் தொடர்பான ஆபாச படங்களை, இணையதளத்தில் இருந்து பதிவிக்கம் செய்து பார்ப்பது, அதை, 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பரப்புவது, சட்டப்படி குற்றம்.மேலும், அது போன்ற படங்கள் மற்றும் வீடியோக்களை, மொபைல் போன், கணினி மற்றும் மடிக்கணியில் வைத்திருப்பதும் சட்டப்படி குற்றம்; மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்து இருந்தோம். இந்த உத்தரவை மீறிய, உடற்பயிற்சி சாதன மொத்த வியாபாரி உட்பட, சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பலருக்கு வலை விரிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்கள், முற்றிலும் குறைந்து விட்டனர். குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர் தொடர்பான ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்கள் பார்ப்பது மட்டுல்ல, அவர்களை கேலி செய்து, குறும்புத்தனமான வீடியோக்களை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளத்தில் வெளியிடுவதும் குற்றம். இதுபோன்ற, வீடியோ உருவாக்கத்தில் பின்னணியில் இருப்போர், 'கேமராமேன்' உள்ளிட்ட அனைவருக்கும், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் வகையில், 'போக்சோ' சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.




சமீபத்தில், 'யூ டியூப்' வலைதளத்தில், சிறுவர் தொடர்பான, வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட நபர், சிறுவன் ஒருவனிடம், 'உள்ளாடை அணிந்து இருக்கிறாயா? என்ன நிறம்... காட்டு பார்க்கலாம்!' என, அருவருக்கதக்க வகையில் கேட்கிறார் ஒருவர். அந்த சிறுவன், அவமானத்தால் கூனி குறுகி விடுகிறான்.இந்த வீடியோ, 'தினமலர்' நாளிதழ் வாயிலாக, எங்களுக்கு கிடைத்தது. அந்த வீடியோவை, சைபர் கிரைம் போலீசாரின் விசாரணைக்கு அனுப்பி உள்ளோம். அந்த வீடியோ தயாரிப்பில் ஈடுபட்ட அனைவர் மீதும், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை விசாரிக்கும்போது, போலீசார் சீருடை அணிந்திருக்க கூடாது; சாதாரண உடை அணிந்து தான் விசாரிக்க வேண்டும். குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களை, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அடிப்பது, அவர்களை ஆபாசமாக பேசுவது கூட சட்டப்படி குற்றம். அப்படி இருக்கும்போது, கேளிக்கை என்ற பெயரில், குறும்புத்தனமான வீடியோ வெளியிடுவது, தண்டனைக்குரிய குற்றம். மேலும், ஆண்கள் மற்றும் பெண்கள் கூட, தங்களின் அனுமதி இல்லாமல், குறும்புத்தனமான வீடியோ வெளியிட்டுள்ளனர் என, புகார் அளித்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, ரவி கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
19-ஜன-202009:32:56 IST Report Abuse
Nallavan Nallavan இதில் காட்டப்படும் தீவிரம் அன்றாடம் நடைபெறும் குற்றங்களைக் குறைப்பதிலோ ஒழிப்பதிலோ காட்டப்படுமா ????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
19-ஜன-202009:27:13 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ போலீசாரின் நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில், ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்கள் பார்ப்பவர்கள், முற்றிலும் குறைந்து விட்டனர். //// நம்பிட்டோம் ........
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
18-ஜன-202010:55:13 IST Report Abuse
Muthukrishnan,Ram காவல் துறைக்கு ஒரு அன்பான வேண்டுகோள் குடி குடியை கெடுக்கும் என்று எழுதி வைத்து சாராயம் விற்பது போல் உள்ளது தங்கள் செயல். தவறான சில வெப்சைட்டுகளை யாரும் காண முடியாமல் முடக்கினால் என்ன ?? அப்படி செய்தால் அதை பார்ப்பவரின் எண்ணிக்கை குறைந்தது போல் இருக்கும். தங்களுக்கும் தலை வலி இல்லாமல் இருக்கும் அல்லவா இது ஒரு யோசனை தான் தாங்கள் நினைத்தால் சாத்தியமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X