தமிழ்நாடு

விரைவில் நகர் பகுதி உள்ளாட்சி தேர்தல்: போட்டியிட தயாராவோர் போட்டி போட்டு காலண்டர் வினியோகம்

Added : ஜன 17, 2020
Share
Advertisement

சேலம்: விரைவில் நகர் பகுதி உள்ளாட்சி தேர்தல் நாள் அறிவிக்கப்படும் என்பதால், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்துள்ளவர்கள், போட்டி போட்டு வாக்காளர்களுக்கு, 'காலண்டர்' வினியோகிக்கின்றனர்.
தமிழகத்தில், ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதனால், அ.தி.மு.க., - தி.மு.க.,வில், போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்.

ஆதரவு பிரசாரம்: குறிப்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு சார்பில் வழங்கிய, 1,000 ரூபாயுடன் கூடிய பரிசு பொருளை, அ.தி.மு.க.,வினர், தங்களது ஆதரவு பிரசாரமாக மாற்றினர். இதுவரை, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் முடங்கிய, அக்கட்சி நிர்வாகிகள், தாமாக முன் வந்து பரிசு பொருட்களை முன்னின்று வழங்கினர்.

சாலைகள் சீரமைப்பு: இதுதவிர, கடந்த, 30 முதல், பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் வரை, தங்கள் கட்சி தலைவர்கள், சின்னம் அச்சிட்ட காலண்டர்களை, தங்கள் கட்சியினர் மட்டுமின்றி, வீடுதோறும் வினியோகித்தனர். குறிப்பாக, நகர் பகுதி தேர்தலில் போட்டியிட வாய்ப்பை எதிர்பார்ப்பவர்கள், தங்கள் பங்குக்கு காலண்டர் வினியோகித்ததால், ஒரே கட்சியின் காலண்டர், இரண்டுக்கும் மேற்பட்டவை, வீடுகளில் தொங்குகின்றன. நகரில், சில வார்டுகளில் சாலை சீரமைப்பு, சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தல், கழிப்பிட பராமரிப்பு பணி உள்ளிட்டவற்றை, வார்டு செயலர், முன்னாள் கவுன்சிலர், மண்டல குழு தலைவர், மேயர் பதவியை எதிர்பார்த்துள்ளவர்கள் களமிறங்கி, அதிகாரிகளை முடுக்கிவிட்டனர்.

களமிறங்கிய ஆளுங்கட்சியினர்: ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு, அ.தி.மு.க.,வுக்கு திருப்தியளிக்கும்படி இல்லாததால், சாலை உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு ஆளுங்கட்சியினர் உத்தரவிட்டு, அவர்களே களமிறங்கி பணியில் ஈடுபடுகின்றனர். சேலம் மாநகரில், 20க்கும் மேற்பட்ட வார்டுகளில், சாலை பணி முடிந்து, பளபளப்பாக காட்சியளிக்கின்றன. 20க்கும் மேற்பட்ட வார்டுகளில் சாலை சீரமைப்பு பணி, இரவு, பகலாக நடக்கிறது. விடுமுறை நாளான நேற்று, சேலம், செவ்வாய்ப்பேட்டை உள்பட முக்கிய சாலைகள் சீரமைப்பு பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X