பொது செய்தி

இந்தியா

ஆண்டுக்கு ரூ.60,000 சம்பளம் வாங்குபவருக்கு ரூ.3.50 கோடி அபராதம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (28)
Advertisement
BPO, employee,IT, notice, வருமானவரித்துறை, அபராதம்,

இந்த செய்தியை கேட்க

போபால் :மத்திய பிரதேசத்தில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஊழியருக்கு, வருமான வரித் துறை, 3.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தை சேர்ந்த, ரவி குப்தா என்பவர், பி.பி.ஓ., நிறுவனத்தில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்.இவர் வங்கிக் கணக்கில், 2011-12ம் நிதியாண்டில், 132 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை நடந்திருப்பதை, வருமான வரித் துறை கண்டுபிடித்தது. இதையடுத்து, அத்தொகைக்கு, 'வரி மற்றும் அபராதமாக, 3.50 கோடி ரூபாய் செலுத்த வேண்டும்' என, ரவி குப்தாவுக்கு, குவாலியர் வருமான வரி அலுவலகம், 'நோட்டீஸ்' அனுப்பியது.இதனால், ரவி குப்தா அதிர்ச்சி அடைந்தார். விசாரணையில், சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனம் ஒன்று, மும்பை அலுவலகம் மூலம், ரவி குப்தாவின், 'பான்' எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை பயன்படுத்தி, 132 கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனை மேற்கொண்டு, வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்தது.





இது தொடர்பாக, ரவி குப்தா, குவாலியர் மற்றும் லுாதியானா போலீசில் புகார் அளித்த போது, அவரை மும்பை போலீசில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர்.மும்பை போலீசில் கூறினால், பணப் பரிவர்த்தனை செய்த மோசடி கும்பலால் தனக்கு ஆபத்து நேரலாம் என, ரவி குப்தா அஞ்சுகிறார்.அபராதம் செலுத்த தவறினால், வங்கிக் கடனில் வாங்கிய வீட்டை, வருமான வரித் துறை முடக்கி விடும் எனவும் கவலைப்படுகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
18-ஜன-202020:55:06 IST Report Abuse
Nallavan Nallavan \\\\ இது தொடர்பாக, ரவி குப்தா, குவாலியர் மற்றும் லுாதியானா போலீசில் புகார் அளித்த போது, அவரை மும்பை போலீசில் புகார் அளிக்குமாறு கூறியுள்ளனர். //// உள்ளூர் காவல்துறையிடம் புகார் அளிப்பதுதானே நடைமுறை ????
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
18-ஜன-202020:53:49 IST Report Abuse
Nallavan Nallavan அரைகுறையான செய்தி ......
Rate this:
Share this comment
Cancel
Sundararaman Iyer - Bangalore,இந்தியா
17-ஜன-202022:33:21 IST Report Abuse
Sundararaman Iyer Harassment of innocents and misleading searches by IT Dept.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X