பொது செய்தி

இந்தியா

எனது மகள் மரணத்தை அரசியலாக்குகிறார்கள் : நிர்பயா தாய்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (23)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தனது மகளின் மரணத்தை சிலர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதாக நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார்.





டில்லியில் 2012 ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான முகாஷ் சிங் அளித்தள்ள கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது. முன்னதாக முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிப்பதாக டில்லி அரசு நேற்று (ஜன.,16) அறிவித்தது.




இந்நிலையில் நிர்பயாவின் தாய் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், இதுவரை நான் அரசியல் பேசியதில்லை. ஆனால் இப்போது சிலரை பற்றி பேச விரும்புகிறேன். 2012 ல் என் மகளின் மரணத்திற்காக யாரெல்லாம் தெருக்களில் இறங்கி போராடினார்களோ, அவர்கள் எல்லாம் இப்போது எனது மகளின் மரணத்தை அரசியல் ஆதாயத்திற்கான விளையாட்டிற்காக பயன்படுத்துகிறார்கள் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஜன-202023:51:27 IST Report Abuse
மலரின் மகள் தென் மாவட்டங்களில் சில பல வழக்குகளில் சமயங்களில் பழிக்குப்பழி என்று நீதிமன்ற வாசலிலேயே கூட ஆயுதங்களால் தீர்ப்பை பாதிக்கப்பட்டவர் உறவினர்கள் குழுவினர்கள் செய்வதற்கு நமது நீதிமன்ற நடைமுறைகளும் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் அபரிதமான சலுகைகளும் முக்கிய காரணிகள் அல்லவா
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
17-ஜன-202020:53:37 IST Report Abuse
Nallavan Nallavan ஜனாதிபதியே நிராகரித்து விட்டதால் கவிதாயினி கனிமொழி தூக்கு தண்டனையை எதிர்க்க மாட்டார் ..... பாவம் ..... தர்மசங்கடம் ...... அது சரி ..... அஜ்மல் கசாப், அப்சல் குறு ஆகியோருக்கு கவிதாயினியால் ஆதரிக்கப்படும் பெருமை கிட்டவில்லையே ?? ஐயோ பாவம் .......
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
17-ஜன-202020:30:50 IST Report Abuse
Sanny ஆஷா தேவி அம்மா கவலை வேண்டாம், கண்டிப்பாக தூக்கு இவங்களுக்கு இருக்கு, கால தாமதம், அதுவும் நல்லதுக்கு. உங்க மகள் அவங்களை லேசில் சாகவிடமாட்டாங்க, தாமதிக்கு ஒவொரு நிமிடமும் இந்த நான்குபேரும் அணு அணுவாக மன வேதனையில் உன்னமுடியாது, உறங்க முடியாது செத்துக்கிட்டே இருக்காங்க, அதுவே பெரிய தண்டனை . நம்புங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X