மாஜி டிஜிபி.,யை கேள்வி கேட்ட நிருபர் மீது தாக்குதல்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (9)
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம் : செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் டிஜிபி.,யை கேள்வி கேட்ட பத்திரிக்கையாளர், அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.





திருவனந்தபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி டி.பி.சென்குமார், ஸ்ரீ நாராயணா தர்மா பரிபாலன யோகம் வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்த பத்திரிக்கையாளர் கடவில் ரஷீத் என்பவர் சென்குமாரின் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக ரமேஷ் சென்னிதலா அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, சென்குமார் தவறுதலாக டிஜிபி.,யாக நியமிக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.




இதனால் கோபமடைந்த சென்குமார், பத்திரிக்கையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து சென்குமாரின் ஆதரவாளர்கள் சிலர், பத்திரிகையாளரை தாக்கி, வலுக்கட்டாயமாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற அறையிலிருந்து வெளியேற்றினர். பத்திரிக்கையாளர்கள் சிலர் ரஷீத்திற்கு ஆதரவாக பேசியதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202022:26:17 IST Report Abuse
Tamilan டி ஜி பிக்களும் சாதாரண மனிதர்கள்தான் , குண்டர்களும் சாதாரண மனிதர்கள்தான் . காவல்துறையின் உயர்பதவிகளில் பல குண்டர்கள் இருக்கலாம் . குண்டர்களாக முத்திரை குத்தப்பட்ட பலரில் கால்துறையின் உயர்பதவியினர் செய்ய வேண்டிய வேலையை திறம்படச்செய்து கொண்டிருக்கலாம் . முன்பின் யாரென்றே தெரியாதவர்களை , வெறும் சர்ட்டிபிகேட்டுகளையும் ஓரிரண்டு மணிகள் நேரம் தேர்வுகளும் வைத்து மட்டும் ஒருவரை உயர்பதவிகளுக்கு தேர்வு செய்வது, அரசியல் சட்டத்தின் ஓட்டைகளில் ஒன்று .
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202014:47:15 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதுக்கு இவரு நிருபர்களை சந்திக்கனும் ?. நம்ம பிரதமரை பாருங்க, அவருகிட்ட நீங்கெல்லாம் கத்துக்கனும்.
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
17-ஜன-202016:02:14 IST Report Abuse
தாண்டவக்கோன் உரசாத ......
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202019:21:02 IST Report Abuse
தமிழ்வேல் பொய்யா சொன்னேன் ?...
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-ஜன-202014:25:08 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN பத்திரிகை சுதந்திரம் அத்து மீறினால் இந்த நிலைதான் .உரிமை இருக்கிறு என்று எதை ஒண்ணாலும் கேட்க லாமா? கூடாது என்பதைத்தான் புரிய வைத்துள்ளனர்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202000:23:50 IST Report Abuse
தமிழ்வேல் அப்போ எதுக்கு கூப்பிடனும் ? விளம்பரத்துக்கா? பேசாம அறிக்கையா நியூஸ் பேப்பருக்கு குடுத்துட வேண்டியதுதானே ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X