மோடி, அமித்ஷா மவுனம் ஏன்? ராகுல் கேள்வி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (44)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, PmModi, Modi, Narendramodi, PmNarendraModi,HmAmitshah, amitshah, Nsa, ajitdoval, nsaajitdoval,பிரதமர்மோடி, மோடி, நரேந்திரமோடி, அமித்ஷா, உள்துறைஅமைச்சர்அமித்ஷா, தேசியபாதுகாப்புஆலோசகர், அஜித்தோவல், என்எஸ்ஏ, தோவல்,

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக டிஎஸ்பி தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டது குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமைதியாக இருப்பது ஏன் என காங்., முன்னாள் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:3 பயங்கரவாதிகளுக்கு, டிஎஸ்பி தேவிந்தர் சிங் தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்ததுடன், அவர்களை டில்லிக்கு அழைத்து சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். விரைவு நீதிமன்றம் அமைத்து, 6 மாதங்களுக்குள் அவரிடம் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். அதில் அவர் குற்றவாளி என நிரூபணமானால், தேசதுரோகத்திற்காக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.





மேலும், இதனுடன், போஸ்டர் ஒன்றையும் ராகுல் வெளியிட்டுள்ளார். அதில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள்,தேவிந்தர் சிங் கைது விவகாரத்தில், பிரதமர், உள்துறை அமைச்சர், தேசியபாதுகாப்பு ஆலோசகர் மவுனமாக இருப்பது ஏன்?
புல்வாமா தாக்குதலில், தேவிந்தர் சிங்கின் பங்கு என்ன?
இன்னும் எத்தனை பயங்கரவாதிகளுக்கு அவர் உதவி செய்துள்ளார்?
அவரை யார் பாதுகாத்தது & எதற்காக பாதுகாத்தனர்? இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






ராகுல் சகோதரியும், காங்., பொது செயலாளருமான பிரியங்கா டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: காஷ்மீரில், தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டிருப்பது, இந்தியாவின் தேசியபாதுகாப்பு குறித்து முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. அவரை இத்தனை நாள் கண்டுபிடிக்காமல் இருந்தது எப்படி என்ற சந்தேகம் எழுகிறது. வெளிநாட்டு தூதர்களை கவனித்து கொள்ளும் பணி உட்பட பல முக்கிய பணிகள் அவரிடம் அளித்துள்ளனர். அவர் யாருடைய உத்தரவின் கீழ் பணியாற்றினார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த உதவுவது தேசதுரோகம் ஆகும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
18-ஜன-202012:56:24 IST Report Abuse
Rafi அபசல்குரு, தன்னுடைய வாக்குமூலத்தில் இந்த தேவிந்தர் சிங்க் சொல்லித்தான் தான் பாராளுமன்ற குற்றவாளிகள் என்று கூறப்படும் குற்றவாளிகளுக்கு வாடகைக்கு வீடுபிடித்து கொடுத்தேன் என்று தெரிவித்துள்ளது இங்கே கவனிக்க வேண்டியிருக்கு. அபசல்குருவுக்கு தண்டனை வழங்கியபோது கூட நேரடியான ஆதாரங்கள் இல்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளதையும் சேர்த்து அரசு மீண்டும் ஆரம்பத்திலிருந்து விசாரிக்க முன்வருமா? தீவிரவாதிகள் உருவாக்கப்படுகின்றார்கள் என்ற தகவலோடு வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தீவிரவாதிகளால் யாருக்கு பயன் ஆகியுள்ளது என்ற கண்ணோட்டத்தில் விசாரணையை துரிதப்படுத்தினால் எதிர்காலத்தில் தீவிரவாதம் இல்லாத தேசம் என்பதற்கு நாம் முன்னோடி செல்லலாம். முதலில் இந்த தேவிந்தர் சிங்க்கிற்கு முழு பாதுகாப்பு கொடுத்து முழுமையான விசாரணையை நீதிமன்றம் நேரடியாக தலையிட்டு கவனித்து வரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
BJP TEAM - மதுரை,இந்தியா
18-ஜன-202003:04:42 IST Report Abuse
BJP TEAM வேடிக்கை மனிதன் ராகுல்
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
18-ஜன-202001:20:37 IST Report Abuse
dandy இவன் உடலில் ஓடுவது ஈரானிய ரத்தம் ..மறு பாதி இத்தாலிய ரத்தம் ...ஆக..ஆக.. மார்க்கத்திற்கு துணை போவதில் வியப்பில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X