ஆந்திராவில் பா.ஜ., - பவன் கல்யாண் கூட்டணி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (13)
Advertisement
PawanKalyan, JanaSena,Alliance, BJP,Andhra Pradesh,B.J.P,BJP,Bharatiya Janata Party,ஆந்திரப் பிரதேசம்,ஆந்திரா,பா.ஜ

இந்த செய்தியை கேட்க

ஐதராபாத்: ஆந்திராவில், 2024 ல் வரும் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.,வும், நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனாவும் கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணி, ஆட்சியை பிடிக்கும் என இரு கட்சி தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆந்திர மாநில பா.ஜ., பொறுப்பாளர் சுனில் தியோதர் கூறுகையில், பா.ஜ., - ஜனசேனா கூட்டணி அறிவிக்கப்பட்ட நாள் வரலாற்றில் முக்கியமானது. அரசியலில் ஜாதி, வாரிசு அரசியல் ஊழல் ஆகியவற்றை முடிவுக்கு கொண்டு வர இணைந்து பாடுபடுவோம். ஆட்சி அமைத்த குறுகிய காலத்தில் ஜெகன்மோகன் தோல்வியடைந்துள்ளார். சந்திரபாபுவும் தோல்வியை தான் எதிர்கொண்டுள்ளார். தெலுங்குதேசம் அல்லது ஓய்எஸ்ஆர் காங்கிரசுடன் கூட்டணி என்ற கேள்விக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.




ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் கூறுகையில், 2014 க்கு பின்னர், பா.ஜ.,வுக்கும் எங்களுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. கடந்த 3 மாதங்களில், ஆந்திராவின் எதிர்காலத்திற்காக பா.ஜ., தலைவர்களை சந்தித்து பேசினேன். இரு கட்சிகளும் இணைந்து பாடுபடும்.2024ல் ஆந்திராவில் ஆட்சியை பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இரு கட்சி நிர்வாகிகள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க பா.ஜ., ஜனசேனா முடிவு செய்துள்ளது. இக்குழு, விரைவில் கூடி முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது. கடந்த 2014 ல் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து பவன்கல்யாண் கட்சி தேர்தலை எதிர்கொண்டது . இந்த தேர்தலில் பவன் கல்யாண் போட்டியிடவில்லை. 2019 ல் இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பவன் கல்யாண் போட்டியிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜன-202017:07:31 IST Report Abuse
kulandhai Kannan பவன் கல்யாண் ஒரு கூடா நட்பு.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202013:44:22 IST Report Abuse
Tamilan ஜாதியை பற்றி விளாசும் பாஜ கும்பல் , ஒரு சில ஜாதியினரை குறிவைத்து இப்படி ஒரு கோமாளிகள் நாடகமாடுவது உலகமே சிரிக்கும் அளவுக்கு உள்ளது .
Rate this:
Share this comment
baygonspray - Aryan,ஈரான்
17-ஜன-202016:04:31 IST Report Abuse
baygonsprayபிஜோயின் தூண்களே ....
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202013:21:28 IST Report Abuse
Tamilan 2012 -2013 ல் தொடங்கி, 2019 ல் தெலுங்கானா நிகழ்வுக்கு பின்னர் உச்சநீதிமன்றம் உள்ளிட்டோரின் மிகப்பெரிய ட்ரெண்டிங்காகி , இனியும் நடந்துகொண்டிருக்கும் ஒரு தொடர்கதை . மீடியாக்கள் உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் உச்சகட்ட மிகப்பெரிய நாடகமாகிக்கொண்டிருக்கிறது 2020 ல் . இதுதான் நாட்டிலுள்ள பிரச்சினைகளையெல்லாம் விட தலையாய பிரச்சினை என்று சென்றுகொண்டிருக்கிறது . அரசியல் சட்ட்ட மூடர்கள் திருந்த இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X