பொது செய்தி

தமிழ்நாடு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : 28 பேர் காயம்; ஒருவர் உயிரிழப்பு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

மதுரை : உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் ஸ்ரீதர் என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும், பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்து மாடுபிடி வீரர் பரிசு பெற்ற பிரபாகரன் உள்ளிட்ட மாடுபிடி வீரர்கள் 28 பேர் காயம் அடைந்துள்ளனர். 10 பேர் , படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



latest tamil news


மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி காலை 8 மணி துவங்கி நடந்து வருகிறது. இதில் 700 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில் சீறி பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்கள் 28 பேர், காளை முட்டியதில் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று (ஜன.,16) பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி, சிறந்த மாடுபிடி வீரர் பரிசினை பெற்ற பிரபாகரன் என்ற வீரருக்கு காளை கழுத்தில் குத்தியதால் காயம் ஏற்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவர், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து பங்கேற்காமல், ஓய்வு எடுக்குமாறு டாக்டர் அறிவுறுத்தி உள்ளனர். பிரபாகரனுக்கு முகத்தில் 5 தையல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news


ஜல்லிக்கட்டிற்கு காளையை அழைத்து வந்த போது, மற்றொரு காளை முட்டியதில் படுகாயம் அடைந்த சோழவந்தானை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காளை இடுப்பு பகுதியில் முட்டியதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kundalakesi - Coimbatore,இந்தியா
17-ஜன-202020:46:44 IST Report Abuse
Kundalakesi வண்டி ஓட்டும் போது கூட விபத்தில் ஆயிரக்கனக்கானோர் உயிரிழக்கின்றனர். வாகனத்தை தடை செய்யுங்கள். போதுமான பாதுகாப்பை செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-ஜன-202015:10:16 IST Report Abuse
ஆரூர் ரங் அப்பாவி பார்வையாளர் கொல்லப்பட்டதால்தான் ஜல்லிக்கட்டை கோர்ட் தடை செய்தது . மீண்டும் அதே தவறு . இனி கோர்ட்டை குறை சொல்லவேமுடியாது இதுபோன்ற சாவுகள் ஏதில் கொண்டுபோய்விடும் ? பார்வையாளர்கள் இந்த ஜல்லிகட்டைவிட 2 கிரிக்கட்டு அல்லது 1 தலப்பாக்கட்டையே விரும்புவர்
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி ஒருவர் இறப்பு. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X