பொது செய்தி

இந்தியா

மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (58)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றதற்கான ஆதாரத்தை கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டம் (ஆர்டிஐ) மூலம் மனு அளிக்கப்பட்டுள்ளது.






மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது. சிலர் இதனை ஆதரித்து கருத்து வெளியிட்டாலும் கேரளா, பஞ்சாப் போன்ற மாநில சட்டசபைகளில் சிஏஏ.,வுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.





இந்நிலையில் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ் கல்லு என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு அளித்துள்ளார். இதில், பிரதமர் மோடி இந்திய குடியுரிமை பெற்றவரா? அப்படி பெற்றிருந்தால் அதற்கான ஆதாரங்களை சமர்பிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-202019:21:41 IST Report Abuse
Rafi நல்ல கேள்வி, அதற்கான பதிலை முன்மாதிரியாக நாட்டு மக்கள் பயன் படுத்தி கொள்ள பேருதவியாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Dv Nanru - mumbai,இந்தியா
18-ஜன-202011:36:57 IST Report Abuse
Dv Nanru ஒரு பிரதமரை பார்த்து இந்த கேள்வி கேட்க கூடாது அவர் இந்திய தேசத்தில் பிறந்தவர் அவர் இந்தியர் தான் நீ இந்த கேள்வியை கேட்க தகுதியானவனா உனக்கு என்ன யோகிதை இருக்கு ஜோஸ் கல்லு என்ற பெயரே தில்லு முள்ளு பெயர்மாதிரி இருக்கு ...திரு மோடி அவர்கள் இப்போது 130 கோடி மக்களுக்கு பிரதமர், உலக நாடுகள் இப்பொது எல்லாம் அவரை தான் கூப்பிடுகிறார்கள் பேசுவதற்கு வேறு எந்த நாட்டு தலைவர்களையும் இல்லை ..
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
18-ஜன-202010:47:58 IST Report Abuse
hasan பிரதமர் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர் அல்ல , பதவி போனால் அவரும் சாதாரண மனிதர் அவ்வளவு தான் , மோடி அவர்களின் கல்வி சான்றிதழே சந்தேகத்திற்கு இடமானது , குடியுரிமை ஆவணம் பற்றி கேட்பதில் தவறு இல்லை , முதன்மை மந்திரி நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X