50 குண்டுவெடிப்புக்களை நடத்திய 'பலே ஆசாமி' மாயம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (57)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : மும்பை குண்டுவெடிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புக்களை நிகழ்ச்சி, 'மிஸ்டர் பாம்' என பெயர் பெற்ற பயங்கரவாதி, பரோலில் வந்த போது மாயமாகி உள்ளான்.






டாக்டர் ஜலீஸ் அன்சாரி, 90 களின் முற்பகுதியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த ஜெய்பூர் தொடர் குண்டுவெடிப்பு, அஜ்மர் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புக்களில் தொடர்புடையவன். ஆயுள் தண்டனை பெற்று அஜ்மிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்சாரி, மும்பையில் உள்ள தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக டிச.,28 ம் தேதி சுப்ரீம் கோர்ட் பரோல் அளித்ததை அடுத்து, வெளியே வந்தான். கோர்ட் உத்தரவின் படி இன்று (ஜன.,17) காலை அவன் சிறைக்கு திரும்ப வேண்டும். ஆனால் அன்சாரி மாயமாகி விட்டதாக அக்ரிபடா போலீஸ் ஸ்டேஷனில் அவனின் குடும்பத்தினர் நேற்று (ஜன.,16) புகார் அளித்தனர்.





இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது, நேற்று காலை 5 மணிக்கு தொழுகைக்காக சென்ற அன்சாரி அதன் பிறகு வீடு திரும்பவில்லை என தெரிய வந்துள்ளது. பலமணி நேரம் ஆகியும் வீடு திரும்பாததாலும், அவரது மொபைல் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டதாலும் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மாயமான அன்சாரியை மும்பை போலீசார் மற்றும் மஹாராஷ்டிரா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.
தேடப்பட்டு வரும் பயங்கரவாதியாக அடையாளம் காட்டப்படும் அன்சாரி, பாக்.,ல் உள்ள பயங்கரவாத மையத்தில் பயிற்சி பெற்றவன். தடைசெய்யப்பட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புக்களுடனும் அன்சாரிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202014:55:02 IST Report Abuse
Mani . V இது என்னமோ திட்டமிட்டே தப்பிக்க விட்டது மாதிரிதான் தோன்றுகிறது. இத்தனை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஒருவனுக்கு பரோல் கட்டாயம் கொடுத்துதான் தீரவேண்டுமா? அல்லது பேசிய நிதி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டதா?
Rate this:
Share this comment
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-ஜன-202013:00:35 IST Report Abuse
pradeesh parthasarathy ஆளும் மத்திய அரசின் கையாலாகாத நிர்வாகம் ...ஒரு தீவிரவாதி வெளியே இருக்கிறான் .. அவனை உளவுத்துறை மூலம் பின்தொடர்ந்து அவன் யாருடன் எல்லாம் பேசுகிறான் , யார் யாரையெல்லாம் சந்திக்கிறான் .. தோலை பேசி அழைப்புகள் இவற்றை எல்லாம் பின் தொடர வேண்டாமா ...உள்துரை பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது ... காங்கிரஸ் ஆட்சியில் பிடித்த குற்றவாளிகள் எல்லாம் ஒவ்வொன்றாக பிஜேபி ஆட்சியில் தப்பி செல்கிறார்கள் ...அப்புறம் அந்த மலேகான் குண்டு வெடிப்பில் குற்றவாளி யாரென்று அனைவருக்கும் தெரியும் .. ஊடகங்கள் தவறான செய்தியை பரப்ப வேண்டாம் ...
Rate this:
Share this comment
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
18-ஜன-202009:57:17 IST Report Abuse
Nagarajan D நாட்டில் நடக்கும் தவறுகளுக்கு கோர்ட்டுகள் காரணம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.... என்ன அடிப்படையில் பரோல் அல்லது ஜாமீன் தருகிறார்கள் என்று நீதிபதிகள் விளக்கவேண்டும் அதே போல் இடைக்கால தடை நடுக்கால தடை எல்லாம் எப்படி வழங்கப்படுகிறது என்ன அடிப்படையில் தரலாம் என ஒரு வரைமுறை வேண்டும். வாய்தா, இடைக்கால தடை ஜாமீன் பற்றி விவாதிக்க படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X