அதிபரை விமர்சித்த ஆடியோ கசிவு : உக்ரைன் பிரதமர் ராஜினாமா

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

கியிவ் : அதிபரை விமர்சித்த ஆடியோ ஒன்று வெளியானதைத் தொடர்ந்து, உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.






சமீபத்தில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கிக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது என அவரை இழிவு படுத்தும் வகையில் பிரதமர் ஹான்சருக் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. ஆனால் இதனை ஏற்க மறுத்த ஹான்சருக், இது பதி செய்யப்பட்ட அரசு கூட்டங்களில் இருந்து எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது எனவும், இது அதிபரை நான் அழிவுபடுத்துவதாக காட்டுவதற்காக வேண்டுமென்றே சித்தரிக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.





ஆனால் வீடியோ வெளியாகி சர்ச்சையானதால், ஹான்சருக் பதவி விலக நெருக்கடி அதிகரித்தது. இந்நிலையில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒலெக்ஸி ஹான்சருக், அதிபர் அலுவலகத்தில் கடிதம் அளித்துள்ளார். இதுகுறித்து ஒலெக்ஸி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “அதிபர் மீதான எங்கள் மரியாதை மற்றும் நம்பிக்கை குறித்த சந்தேகத்தை நீக்க, ராஜினாமா கடிதத்தை அதிபரிடம் வழங்கி இருக்கிறேன்.
வெளியான ஆடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது. அதில் உண்மை இல்லை” என குறிப்பிட்டுள்ளார். பிரதமரிடமிருந்து ராஜினாமா கடிதத்தைப் பெற்றுள்ளதாகவும் அதுகுறித்துப் பரிசீலிப்பதாகவும் அதிபர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
18-ஜன-202010:53:30 IST Report Abuse
hasan மன்னிப்பு கேட்டால் போச்சு
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
17-ஜன-202019:15:40 IST Report Abuse
A.George Alphonse தனக்கே எல்லாம் தெரியும் மற்றவர்களுக்கு எல்லாம் ஒன்றும் தெரியாது என்ற ஆணவ பேச்சே இவரின் பதவிக்கு ஆப்பு வைத்து விட்டது.பாவம்.
Rate this:
Share this comment
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-ஜன-202018:39:55 IST Report Abuse
amuthan அங்கேயும் ராஜா போய்விட்டாரா?. எதையாவது பேசணும் அப்புறம் நான் இல்லை என்றும் யாரோ என் குரலில் பேசியுள்ளார்கள் என்றும் கூறவேண்டும் . என்ன பொழப்பு
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
18-ஜன-202006:37:58 IST Report Abuse
 nicolethomsonஅட நம்ம சுடலைகான் என்றல்லவா நினைத்தேன் ஏற்கனவே ஜப்பானுக்கு துணைப்பிரதமர் ஆனவர் இங்கே பிரதமர் ஆயிருப்பாரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X