நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.,1 ல் தூக்கு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (12)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற டில்லி கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.






டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் ஜன.,22 அன்று காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டில்லி கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை எதிர்ப்பு குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங் என்பவன் டில்லி அரசுக்கு கருணை மனு அளித்தான். இதனால் கருணை மனு மீது முடிவு எடுக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டில்லி கோர்ட் நேற்று (ஜன.,16) உத்தரவிட்டது.




இந்நிலையில் கருணை மனுவை நிராகரிப்பதாக அறிவித்த டில்லி அரசு, அந்த மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தது. இந்த மனுவை நேற்று இரவு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த உள்துறை அமைச்சகம், கருணை மனுவை நிராகரிக்கவும் பரிந்துரை செய்தது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று, கருணை மனுவை நிராகரிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திகார் சிறை நிர்வாகம் சார்பில், இன்று டில்லி கோர்ட்டில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டில்லி கோர்ட், குற்றவாளிகள் 4 பேருக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜன.,22 ம் தேதிக்கு பதில், பிப்.,1 ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202000:06:59 IST Report Abuse
தமிழ்வேல் பிப்.,1 ம் தேதி காலை 6 to 7 .30 குளிகை. அப்போ நல்ல நேரம்தான்.
Rate this:
Share this comment
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
17-ஜன-202022:56:58 IST Report Abuse
Vena Suna இனி மேல்,குற்றம் நடந்து ஆறு மாதங்களுக்குள் தண்டனை நிறைவேற்ற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
17-ஜன-202020:47:31 IST Report Abuse
Muthukrishnan,Ram கொஞ்சம் கேட்டுதான் பரவாயில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X