இந்திராவின் பெயரை அரசியலுக்கு பயன்படுத்தியது இல்லை: சிவசேனா

Added : ஜன 17, 2020
Advertisement

மும்பை: 'முன்னாள் பிரதமர் இந்திரா, சத்ரபதி சிவாஜி மஹாராஜ் ஆகியோரின் பெயர்களை, சிவசேனா கட்சி ஒருபோதும் அரசியலுக்காக பயன்படுத்தியது இல்லை' என, அந்த கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விமர்சனம்
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத், சமீபத்தில் அளித்த பேட்டியில், முன்னாள் பிரதமரும், காங்., தலைவருமான, மறைந்த இந்திரா, மும்பை நிழல் உலக தாதா கரீம் லாலாவை சந்தித்து பேசியதாக தெரிவித்திருந்தார். இதேபோல், சத்ரபதி வீர சிவாஜியின் குடும்பத்தை சேர்ந்தவரும், பா.ஜ., முன்னாள் எம்.பி.,யுமான உதயன்ராஜே போசாலாவையும், சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித்திருந்தார். 'நீங்கள் சிவாஜி குடும்பத்தை சேர்ந்தவர் என்பதற்கு என்ன சாட்சி உள்ளது' என, கேட்டிருந்தார். இதையடுத்து, இந்திராவை விமர்சித்ததற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல், சிவாஜி குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி விட்டதாக, பா.ஜ., தலைவர்களும், சஞ்சய் ராவத்தை விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில், இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது; அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:முன்னாள் பிரதமர் இந்திராவின் பெயரையும், சத்ரபதி சிவாஜியின் பெயரையும், சிவசேனா கட்சியினர் எப்போதும் அரசியலுக்காக பயன்படுத்தியது இல்லை. இந்திரா மீது, சிவசேனாவுக்கு எப்போதுமே மரியாதை உள்ளது. இந்திராவின் புகழுக்கு, சிலர் களங்கம் ஏற்படுத்த முயன்றபோது, கேடயமாக நின்று, அவரை காத்தது சிவசேனா தலைவர்கள் தான்.
வேடிக்கை
அப்போதெல்லாம், எந்த கேள்வியும் கேட்காமல் ஓடி ஒளிந்தவர்கள் தான், இப்போது சிவசேனாவுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். இந்திராவின் புகழை, நிரந்தரமாக அழிக்க முயற்சித்தவர்கள் தான், இப்போது கூக்குரல் எழுப்புகின்றனர்.காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக செயல்படும் மெஹபூபா முப்தியின் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைத்தவர்கள் தான், பா.ஜ.,வினர். அவர்கள், தற்போது சிவசேனாவை விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X