குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (8+ 12)
Advertisement
குடியுரிமை, சட்டம், எதிராக, பஞ்சாப், சட்டசபை, தீர்மானம்

சண்டிகர்,: கேரளாவை தொடர்ந்து, பஞ்சாப் சட்டசபையிலும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக, நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


எதிர்ப்பு


பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில் சிறுபான்மையின ராக வசித்து, துன்புறுத்தலுக்கு ஆளாகி, அகதிகளாக நம் நாட்டுக்கு வந்துள்ளனர்.அவர்களில், ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்ட சமூகத்தினருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டம், சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கும் கேரளாவில், இந்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபிலும், நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஞ்சாப் சட்டசபையின் சிறப்பு கூட்டத் தொடரில், குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரும் தீர்மானத்தை, அம்மாநில அமைச்சர் பிரம் மஹிந்திரா தாக்கல் செய்தார்.

அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தசட்டத்தால், நாடு முழுதும் போராட்டங்களும், வன்முறையும் நடக்கின்றன. பஞ்சாபிலும்
போராட்டங்கள் நடக்கின்றன. இந்த சட்டத்தால், சிறுபான்மை மக்கள் அச்சத்தில் உள்ளனர்.


வாபஸ் பெற வேண்டும்மதங்களின் பெயரால் குடியுரிமை வழங்குவது, குறிப்பிட்ட தரப்பு மக்களின் மொழி மற்றும் கலாசார அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இது, உண்மையான, சுதந்திரமான ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது; நம் நாட்டின் அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளுக்கு எதிரானது. எனவே, இந்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8+ 12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
18-ஜன-202010:02:22 IST Report Abuse
Balamurugan Balamurugan கேரளாவை தெடர்ந்து பஞ்சாபும் நாட்டிர்க்கு எதிரான நிலையை எடுத்துள்ளது இரண்டு மாநில அரசையும் கலைத்து குடியரசு தலைவர் ஆட்சியை அமைக்க வேண்டும்
Rate this:
Share this comment
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
18-ஜன-202012:12:55 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு அட்டர்னி ஜெனரல் சொல்லி விட்டார் கலைத்து விடுங்கள் ப்ளீஸ்...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
18-ஜன-202014:45:30 IST Report Abuse
Rajasபாலமுருகன் எந்த காலத்தில் இருக்கிறீர்கள், சட்ட சபையை கலைப்பதற்கு. . சட்டத்தை எதிர்த்தால் நாட்டுக்கு எதிரான நிலையா. அப்படியானால் பிஜேபி இப்போது கொண்டு வரும் சட்டம், திட்டங்கள் எல்லாமே காங்கிரஸ் கொண்டு வந்த போது பிஜேபி எதிர்த்தவை தான்....
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-202009:16:38 IST Report Abuse
ருத்ரா கேரளாவும் பஞ்சாப்பும் மிக மோசமான விளைவுகளை சந்திக்கும். மதமாற்ற திருமண சக்திகள் பயங்கரவாதிகளாகி நாட்டை சீர்குலைப்பார்கள் இதில் இப்போது பஞ்சாப். கொடுமை. இந்தியர் என்ற உணர்வு இல்லாதவர்கள்.
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
18-ஜன-202014:57:25 IST Report Abuse
Rajasபஞ்சாபியர் இந்தியர் என்ற உணர்வு இல்லாதவர்களா. இப்படி தான் உங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறதா. விடுதலை போராட்ட காலத்தில் இருந்து இப்போது வரை அவர்கள் தான் முன்னோடி. இந்திய ராணுவத்தில் அவர்களுடைய வீரத்தை மெச்சி சிக் ரெஜிமென்ட் என்ற ஒரு பிரிவே உள்ளது. அவர்கள் ராணுவத்தில் உயர்பதவியில் இருந்த வரை அரசியல்வாதிகள் பயந்து போய் ராணுவ விவகாரங்களில் இருந்து தள்ளியே இருந்தார்கள்....
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
18-ஜன-202008:06:42 IST Report Abuse
svs ....இந்த CAA அஸ்ஸாமில் செயல்படுத்த முடியாது ....CAA என்பது ஹிந்துக்களுக்கு ஆதரவு என்றால் பிறகு மேற்கு வங்க ஹிந்துக்கள் எதற்கு இதை எதிர்க்க வேண்டும் ??.....அவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவா??... மம்தாவுக்கு ஹிந்துக்கள் வாக்குகளும் தேவை .....மேற்கு வங்க பேலூர் மடம் , பிரதமர் CAA பற்றி பேசியது எங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று ஏன் ஒதுங்கி கொண்டது ?.....பேலூர் மடம் ஹிந்துக்கள் தான் .....அசாம் NRC பதிவேட்டில் 13 லட்சம் ஹிந்துக்கள் 6 லட்சம் முஸ்லிம்கள் விடுபட்டு போனது என்று செய்தி ...இது பற்றி பல விதமான செய்திகள் ...அதற்கு காரணம் என்ன??.....CAA என்பது ஹிந்துக்கள் குடியுரிமை என்றால் அது சட்டம்தான் .... குடியுரிமை நிரூபிக்க ஆவணங்கள் தேவை ...முக்கியமாக அஸ்ஸாமில் பல கட்ட ஆவணங்கள் .....அங்குள்ள வெளி நாட்டவர் தீர்ப்பாயம் ஆவணங்களை நிராகரிக்கலாம் .....அப்படியே குடியுரிமை கொடுத்தாலும் கவுஹாத்தி உயர் நீதி மன்றம் இது பற்றி பல தீர்ப்புகள் வழங்கியுள்ளது ...அந்த தீர்ப்புகள் உள்ளர்த்தம் அசாம் அசாம் மக்களுக்கு .....உடனே காந்தி நேரு காஷ்மீரி பண்டிட் என்று பாய வேண்டாம் ..... அஸ்ஸாமில் மேற்கு வங்க ஹிந்துக்கள் முஸ்லிம்கள் எங்கள் தாய் மொழி வங்கம் என்று மக்கள் கணக்கெடுப்பில் கூற தொடங்கினால் அதை எந்த மாநிலம் ஏற்கும் ??.....மற்ற மாநிலங்கள் ஏற்குமா ??....இந்த கன்ஹையா குமார் என்பவன் முன்பு ஜவாஹர்லால் நேரு பல்கலையில் படித்து இப்போது கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பினர் ....இவன் மேற்கு வங்கத்தில் அறிவித்தது NRC , CAA , NPR எதுவும் கேட்க கூடாது ....இந்தியாவில் கோவணம் கட்டியவன் கட்டாதவன் அனைவரும் இந்தியன் ....அப்படி இல்லையென்றால் மத்திய அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்றான்..மேற்கு வங்க மக்கள் கோரிக்கையும் இதுதான் ....வெறும் வாக்கு வங்கிகளுக்காக CAA அமுல்படுத்தினால் இப்படித்தான் விடை வரும்......அசாம் NRC வேறு , மற்ற மாநிலங்கள் NRC வேறு ....இதனால் தாத்தா பாட்டி பெயர் ஆவணம் என்று பல கேள்விகள் ....அதிலும் தெளிவு கிடையாது..... இதற்கு தீர்வு அஸ்ஸாமில் உள்ள வங்காளிகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியேற செய்யலாம் .....இரெண்டு தேசிய கட்சிகளும் சிவ சேனா வுடன் கூட்டு வைத்துள்ளன .....அங்கு சிவ சேனா முதல்வர் ஹிந்துக்களுக்கு ஆதரவு என்பதால் அதை ஏற்று கொள்வார் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X