பிரியங்காவின் திருமண பரிசு படகோட்டியின் குடும்பம் மகிழ்ச்சி

Added : ஜன 17, 2020 | கருத்துகள் (1)
Advertisement
பிரியங்காவின் திருமண பரிசு படகோட்டியின் குடும்பம் மகிழ்ச்சி

வாரணாசி :உத்தர பிரதேசத்தில், தனக்கு படகோட்டியவர் மகளுக்கு திருமண பரிசாக, சேலையை அனுப்பி வைத்துள்ளார், காங்., பொதுச் செயலர்
பிரியங்கா. கடந்த, 10ம் தேதி, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு வந்தார். கடிதம்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்வலர்களை சந்தித்து, ஆதரவு தெரிவித்தார். அவர்களை சந்திக்க, பிரியங்கா, படகில் சென்றார். அந்த படகை ஓட்டிய, அசோக் சாஹ்னி என்பவருடன், கலகலப்பாக பேசினார் பிரியங்கா. குடும்பம் குறித்தும் விசாரித்தார். அப்போது, விரைவில் நடக்க உள்ள தன் மகள் திருமணத்தில் கலந்துகொள்ளும் படி, பிரியங்காவிடம், படகோட்டி அசோக் சாஹ்னி கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், படகோட்டி சாஹ்னி வீட்டிற்கு, காங்., மூத்த தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட காங்., பிரமுகர்கள் நேற்று திடீரென சென்றனர்.
புடவைசாஹ்னியின் மகளுக்கு, பிரியங்கா அளித்த திருமண வாழ்த்து கடிதத்தை அவரிடம் வழங்கினர். மேலும், கல்யாணப் பரிசாக, பிரியங்கா அனுப்பிவைத்த புடவையையும், அஜய் ராய் வழங்கினார். இதனால், சாஹ்னி குடும்பத்தினர் மகிழ்ச்சிஅடைந்தனர். தன் படகில் பல தலைவர்களையும், வி.ஐ.பி.,க்களையும் ஏற்றி சென்றதாகவும், ஆனால், ஒரு முக்கிய நிகழ்ச்சியை நினைவில் வைத்து, பரிசும் வாழ்த்தும் அனுப்பியவர் பிரியங்கா மட்டும் தான் என்றும், சாஹ்னி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
18-ஜன-202005:54:37 IST Report Abuse
skv srinivasankrishnaveni என்னாத்துக்கு இவர்கள் இவ்ளோ அலறுதுங்க CAA என்றால் சந்தேகமாயிருக்கே ஆமாம் பிஜேபி என்னசெய்தாலும் நன்மையிலேதான் முடியுது ,கான் கிரேஸ் ஒரு மண்ணும் நோண்டலே செய்யவுமில்லே ஆனால் (சோனியா வந்தப்பறம் தலைவியாக அவனவனுக்கு காசு சேர்ப்பதுலேதான் குறி தெரிஞ்சுஇவ்ளோ கோடி தெரியால்=மால் பலகோடிகள் என்று சுருட்டிண்டுட்டு மாட்டிக்கப்போறோம் என்றபயம் இவர்கள் எல்லோருக்கும் இருக்கு இந்த ஐரைகிளம் ராகுலும் கால்கிளவி பிரியங்காவும் ஆடும் ஆட்டம் பாங்க்ரா வா இல்லே மணிப்புரி ஓடிச்சியா என்று புரியலே சோனியா இதுகலைகிளப்பிவிட்டுட்டு நல்லவன்போல ஆக்ட் ம்பண்ணுறா அதான் ஸ்பெஷல் ஷோ , இவ்ளோபேசுறார்களே CAA என்றால் விளக்கமா சொல்ல சொல்லுங்களேன் ஏவாலையாச்சும் சொல்லமாட்டானுக பிகாஸ் எல்லாம் ஆட்டுமந்தைக்கூ ட்டம் ஒரு ஆடுவிழுந்தால் எல்லாமே விழும் அதுபோல ஒருவன் உளறினாள் எல்லாம் விவரம்புரியாமலே உளறிண்டு படுத்தும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X