பொது செய்தி

இந்தியா

விண்ணில் ஏவப்பட்டது 'ஜிசாட் - 30'

Added : ஜன 17, 2020
Advertisement
விண்ணில் ஏவப்பட்டது 'ஜிசாட் - 30'

பெங்களூருஇந்தியாவின், 'ஜிசாட் - 30' என்ற, அதிக திறன் வாய்ந்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள், நேற்று அதிகாலை, வெற்றிகரமாகவிண்ணில் ஏவப்பட்டது.இது குறித்து, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:தென் அமெரிக்க நாடான, பிரெஞ்ச் கயானாவில் உள்ள, கவுரோ என்ற இடத்தில், ஏரியன் விண்வெளி தளம் உள்ளது. இங்குள்ள ஏவு தளத்தில் இருந்து, இந்தியாவின் அதிக திறன் கொண்ட, 'ஜிசாட் - 30' செயற்கைக்கோள், இந்திய நேரப்படி, நேற்று அதிகாலை, 2:35க்கு, வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.'ஏரியன் - 5' என்ற ராக்கெட் மூலம், இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது. அதன் உடன், 'யூடெல்சாட்' என்ற ஐரோப்பிய நிறுவனத்தின், 'யூடெல்சாட் கனெக்ட்' எனப் பெயரிடப்பட்ட மற்றொரு செயற்கைக்கோளும் ஏவப்பட்டது.ஏரியன் - 5 ராக்கெட்டில் இருந்து பிரிந்த உடன், ஜிசாட் - 30 செயற்கைக்கோளின் கட்டுப்பாடு, கர்நாடக மாநிலம், ஹசனில் உள்ள இஸ்ரோவின் தலைமை கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இந்த செயற்கைக்கோள், 3,357 கிலோ எடை உடையது. தொலை தொடர்பு, டி.டி.எச்., எனப்படும், வீடு தேடி வரும், 'டிவி' நிகழ்ச்சிக்கான சேவைகள், ஏ.டி.எம்., டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, பங்கு சந்தை உட்பட, பல்வேறு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள தீவுகள், வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் பல ஆசிய நாடுகளுக்கு, ஜிசாட் - 30 செயற்கைக்கோளின் சேவை, பெரிதும் உறுதுணையாக இருக்கும்.இந்த செயற்கைக்கோள், 15 ஆண்டுகளுக்கு இயங்கும் திறன் கொண்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X