பொது செய்தி

தமிழ்நாடு

அணைகளை சுத்தம் செய்யும் பணி துவக்கம்: தண்ணீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை

Added : ஜன 17, 2020
Advertisement
 அணைகளை சுத்தம் செய்யும் பணி துவக்கம்: தண்ணீரை காய்ச்சிக் குடிக்க அறிவுரை

மேட்டுப்பாளையம்:மஞ்சூர் பகுதிகளில் உள்ள அணைகளில், சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செந்நிறத்தில் தண்ணீர் ஓடுகிறது.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள அப்பர் பவானி, அவலாஞ்சி ஆகியவை, அதிக அளவில் மழை பெய்யும் பகுதிகளாகும். அப்பர் பவானி அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரை, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி ஆகிய நான்கு அணைகளுக்கு, குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக பில்லுார் அணையில் சேரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பர் பவானியில் திறந்துவிடும் தண்ணீரைக் கொண்டு, அவலாஞ்சி, குந்தா, கெத்தை, பரளி, பில்லூர் அணை ஆகிய ஐந்து அணைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இத்திட்டங்கள் அனைத்தும், காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டன.இதில், அவலாஞ்சி, குந்தா, கெத்தை ஆகிய அணைகளில் அடிக்கடி சேறும் சகதியும் நிறைவதால், அதிகளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அணைகளில் உள்ள சேறு, சகதி கலந்த தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு குந்தா, கெத்தை, பரளி ஆகிய மூன்று அணைகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடந்தன. அப்போது அணைகளில் இருந்து வெளியேறிய தண்ணீர், பில்லுார் அணைக்கு வந்து சேர்ந்தது.
பில்லுார் அணையிலிருந்து, மின்சார உற்பத்திக்கு தண்ணீர் திறந்து விடும்போது, செந்நிறத்தில் பவானி ஆற்றில் தண்ணீர் ஓடியது. பவானி ஆற்றிலிருந்து, மேட்டுப்பாளையம், திருப்பூர் மாநகராட்சி உள்பட, 16 குடிநீர் திட்டங்களுக்கு, தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆற்றில் தற்போது செந்நிறத்தில் தண்ணீர் ஓடுவதால், எவ்வளவு சுத்தம் செய்தாலும், குடிநீர் வினியோகம் செய்யும்போது, தண்ணீர் செந்நிறத்தில் உள்ளது.எனவே, பவானி ஆற்று நீரை கொதிக்கவைத்து, ஆறிய பின்பு குடிநீராக பயன்படுத்த வேண்டுமென, நகராட்சி கமிஷனர் சுரேஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X