கர்நாடகாவில் எஸ்.டி.பி.ஐ., மீது நடவடிக்கை: சிறப்பு படை போலீசார் அதிரடி

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (24)
Advertisement
கர்நாடகா,எஸ்.டி.பி.ஐ., நடவடிக்கை,சிறப்பு படை,போலீசார், அதிரடி

பெங்களூரு: ''பெங்களூரு உட்பட, நாட்டின் பல்வேறு பகுதி களில், தேச விரோதநடவடிக்கைகளில் எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் பங்கேற்றுள்ளனர்.

அமைதியை குலைக்கும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் தொண்டர்களுக்கு, மாதந்தோறும், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுத்து, ஊக்கப்படுத்துகின்றனர்,'' என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகாவில், முதல்வர் எடியூரப்பா தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு, சமீப காலமாக பயங்கரவாதிகள் பிடிபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெங்களூரு போலீஸ் கமிஷனர், பாஸ்கரராவ் கூறியதாவது:


ஊதியம்


எஸ்.டி.பி.ஐ., எனப்படும், 'சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற அமைப்பு, பெங்களூரு உட்பட, நாட்டின் பல்வேறு பகுதிகளில், அமைதியை குலைக்கும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஈடுபடுவோருக்கு, மாதந்தோறும், 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

மக்களிடம் பயத்தை ஏற்படுத்த எஸ்.டி.பி.ஐ., முயற்சிக்கிறது. கலவரம் செய்யவும், பஸ்களுக்கு தீ வைக்கவும், இந்த அமைப்பினருக்கு பணம் வழங்கப்படுகிறது.இவர்களுக்கு நிதியுதவி வழங்குவோர் யார்; இது போன்ற குற்றச்சம்பவங்களை நடத்த, ஆதரவளிப்பவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க, பெங்களூரின் மத்திய குற்றப்பிரிவில், 'பயங்கரவாத தடுப்பு படை' என்ற சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

சதித்திட்டங்களை முறியடிக்க, நாங்கள், 'பெங்களூரு டெரர் மாட்யூல் - 1' என பெயரிட்டு, விசாரணை நடத்துகிறோம். இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.டி.பி.ஐ.,யின் குற்றச் சம்பவங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் ஆதரவளிக்கவில்லை. பெரும்பாலான முஸ்லிம் அமைப்பினருடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியபோது, எஸ்.டி.பி.ஐ., அமைப்பு மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அவர்கள் கேட்டுக் கொண்டனர்.தமிழகத்திலிருந்து பெங்களூருக்கு வந்து, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர்களை, பெங்களூரு போலீசாரின் உதவியுடன், தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர்.


நடவடிக்கை



விஷமிகளை ஒடுக்குவது, அமைதியை காப்பாற்றுவது மட்டுமே எங்களின் நோக்கம். தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரின் நடவடிக்கை பற்றி, எங்களிடம் அனைத்து தகவல்களும் உள்ளன. மத கலவரத்தை உருவாக்க, கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபட்டுள்ள எஸ்.டி.பி.ஐ., இதுவரை செய்துள்ள குற்றங்கள் தொடர்பாக, விரிவான அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்படும். இந்த அமைப்பை தடை செய்யும்படி அரசிடம் வேண்டுகோள் விடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


6 பயங்கரவாதிகள் கைது



பெங்களூரில் ஆறு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். பா.ஜ., -எம்.பி., மற்றும் ஹிந்து மத தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு, முடியாமல் போனதால், ஆர்.எஸ்.எஸ்., தொண்டரை தாக்கி, பெங்களூரின் அமைதியை குலைக்க சதித்திட்டம் தீட்டிய, 27 - 46 வயதுடைய ஆறு பயங்கரவாதிகள் நேற்று கைது செய்யப்பட்டதாக, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசத்துரோகம், கிரிமினல் வழக்கு உட்பட வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-ஜன-202002:30:20 IST Report Abuse
meenakshisundaram நெல்லை (நொள்ளை ) Kannan பெங்களூரு பக்கம் வந்து விட வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
18-ஜன-202022:24:22 IST Report Abuse
Raja முஸ்லிம்களில் மிதவாதிகள் இருந்தாலும் தீவிரவாதிகளை எதிர்த்து அவர்களால் எதுவும் செய்ய முடியாது. காரணம் வெறியர்கள் தங்கள் சகோதர முஸ்லிம்களையே தாக்க தயங்கமாட்டார்கள். இதை புரிந்துகொண்டு மிதவாதிகள் அமைதிகாக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Krish - Bengalooru,இந்தியா
18-ஜன-202021:25:29 IST Report Abuse
Krish அமைதி மார்க்கம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X