அரசு பங்களாவை ஆக்கிரமித்துள்ளது யார்? மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (6)
Advertisement
அரசுபங்களா, ஆக்கிரமிப்பு, மத்தியஅரசு, டில்லி உயர் நீதிமன்றம்,கேள்வி

புதுடில்லி: எந்தவிதமான அரசு பதவியிலும் இன்றி, அரசு பங்களாக்களை எத்தனை பேர் ஆக்கிரமித்துள்ளனர் என்ற விபரத்தை அளிக்கும்படி, மத்திய அரசுக்கு டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


குடியிருப்பு



டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறப் பட்டுஉள்ளதாவது:டில்லியில் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகள் பலருக்கு, அரசு குடியிருப்பு இல்லாத சூழல் இருக்கிறது.கடந்தாண்டு மே மாதத்தில் மட்டும், டில்லியில் உள்ள, பல்வேறு நீதிமன்றங்களுக்கு, 126 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்.

இவர்களுக்கு அரசு குடியிருப்புகள் கிடைக்க வில்லை. இவர்கள், நகரின் வெவ்வேறு பகுதிகளில் வசிப்பதால், அவசர வழக்கு தொடர்பாக, இவர்களை வழக்கறிஞர்கள், போலீசார், எளிதில் அணுக முடியவில்லை.டில்லியில் உள்ள பல அரசு பங்களா மற்றும் குடியிருப்புகளில், எம்.பி., - எம்.எல்.ஏ., உள்ளிட்ட, அரசின் எந்த பணியிலும் இல்லாத பலர், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


அறிக்கை

இந்த மனு, தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஹாரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:டில்லியில் உள்ள அரசு குடியிருப்புகளில், எந்தவித அரசு பணியிலும் இல்லாத, எத்தனை பேர், சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருக்கின்றனர் என்ற விபரத்தை, மத்திய அரசும், டில்லி நகர வளர்ச்சி கழகமும் கணக்கெடுத்து, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
19-ஜன-202009:36:40 IST Report Abuse
Gnanam "சட்டவிரோதமாக ஆக்கிரமித்து குடியிருக்கின்றனர் என்ற விபரத்தை, மத்திய அரசும், டில்லி நகர வளர்ச்சி கழகமும் கணக்கெடுத்து, அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்" இத்தனை நாட்களுக்குள் கட்டாயம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டால் நல்லது. இல்லாவிட்டால் ஆண்டு கணக்கில் நீண்டு போகும்.
Rate this:
Share this comment
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஜன-202022:35:18 IST Report Abuse
sankaseshan நேரு குடும்பம் 70 வருஷத்துக்கு மேலாக இஷ்டம்போல அரசு பங்களாக்களை இலவசமாக அனுபவித்து வருகிறது யார் கேட்பது
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜன-202017:01:05 IST Report Abuse
RajanRajan உங்களுக்கு வானமே எல்லை சாமி. இருந்தாலும் யாருடைய உரிமையும் சுதந்திரமும் பாதிக்காத வகையில் உங்கள் நடவடிக்கை அமைய பல்லாண்டு வாழ்க என இன்னிக்காச்சும் கண்திறந்ததற்கு ஒரு ஜனநாயக வாழ்த்துரைக்கிறோம் சாமிகளா. தொடர்க நடவடிக்கை வாழ்க பாரதம். இந்நேரம் அவிங்க இருக்கிற வீட்டை அவுங்க பெயரிலே பட்டா போட்டிருப்பானுங்க கட்டிங் வித்தை மூலம். நல்லாவே காமடி பண்ணுறீங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X