பொது போக்குவரத்து மின்சார மயமாவது எப்போது? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (7)
Advertisement
பொதுபோக்குவரத்து, மின்சாரமயம், மத்தியஅரசு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ்

புதுடில்லி : பொது மக்கள் பயன்பாட்டுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அரசு வாகனங்கள் அனைத்தையும், படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றும் கொள்கை முடிவு, எந்த நிலையில் உள்ளது என்பது பற்றி, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பியது.

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளியாகும் கரும் புகையால், காற்று மாசு ஏற்படுகிறது. புவி வெப்பமயமாவதற்கு, இது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.எனவே, மின்சார வாகனங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்கவும் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, 'பேம் இந்தியா' என்ற திட்டம் வகுக்கப்பட்டது.


விற்பனை


இதன் முதல் கட்ட திட்டத்தில், 2015 காலகட்டத்தில், 343 கோடி ரூபாய் செலவில், 2.78 லட்சம் மின்சார கார்கள் மானிய விலையில் விற்பனை செய்யப்பட்டன. கூடுதலாக, 465 மின்சார பஸ்கள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டன.இதன் இரண்டாம் கட்ட திட்டமிடுதல், தற்போது நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளை, மின்சார வாகனங்களாக மாற்ற திட்டமிடப்பட்டது.

இதன்படி, 7,000 மின்சார பஸ்கள், ஐந்து லட்சம் ஆட்டோக்கள், 55 ஆயிரம் கார்கள், 10 லட்சம் இருசக்கர வாகனங்களை, மானிய விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மின் வாகனங்களை, 'சார்ஜ்' செய்யும் நிலையங்கள் அமைக்கவும், திட்டம் வகுக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மின்சார பஸ்கள் தயாரிக்கும் சீன நிறுவனத்துடன், டாடா மோட்டார்ஸ் உட்பட, சில இந்திய நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து, தொழிற்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.இந்த பணிகள், 2021ல் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், நாட்டில் உள்ள அனைத்து பஸ்களும், மின்சார பஸ்களாக மாற்றப்படும் என, மத்திய சாலை போக்குவரத்து துணை அமைச்சர் நிதின் கட்கரி, சமீபத்தில் அறிவித்தார்.

மேலும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான போக்குவரத்து வாகனங்கள் மற்றும் அரசு வாகனங்கள், படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றப்படும் என்று அறிவித்தார்.ஆனால், திட்டத்தை நடைமுறைபடுத்துவதில், மத்திய அரசு மெத்தனம் காட்டி வருவதாக, குற்றச்சாட்டு எழுந்தது.


உத்தரவு

இதற்கிடையே, 'பொது போக்குவரத்து மற்றும் அரசு வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்றும் அரசின் கொள்கை முடிவு குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.இதை விரைந்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும்' என, டில்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.


முடிவு


அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் கூறியதாவது:மத்திய அரசு, 2012ல், தேசிய மின் போக்குவரத்து கொள்கை திட்டத்தை கொண்டு வந்தது.இதன் படி, அரசு வாகனங்கள் மற்றும் பொது மக்கள் பயன்படுத்தும் சேவைகளை, மின்சார மயமாக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மானிய திட்டங்கள், வரி விலக்கு சலுகைகளுடன், பொது இடங்கள், குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மின்சார, 'சார்ஜிங்' வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை மத்திய அரசு சரிவர செயல்படுத்த வில்லை. இதனால், காற்று மாசு அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்கான போக்குவரத்து சேவைகள் மற்றும் அரசு வாகனங்கள் அனைத்தையும், படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்ற திட்ட மிடப்பட்டுள்ளது.இது குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றி, நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


பஸ்கள் மீது கவனம் ஏன்?


கார்களை விட, மக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் பொது போக்குவரத்தை மின்சார வாகனங்களாக மாற்றுவதில், அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.இந்த வகையில், 2019, ஆகஸ்டில், 64நகரங்களில், 5,595 மின்சார பஸ்கள் வாங்க, மத்திய அரசு நிதி வழங்கியது. மேலும், 'பேம் - 2' திட்டத்தின் மொத்த நிதியில், பஸ்களுக்கு, 35 சதவீதம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ள தாகஅதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
18-ஜன-202022:28:29 IST Report Abuse
sankaseshan நீதிமன்றங்கள் அரசுக்கு ஆயிரம் யோசனை சொல்லுவார்கள் தங்களுடைய
Rate this:
Share this comment
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
18-ஜன-202021:43:37 IST Report Abuse
tamilvanan இதற்கு கோர்ட் எப்படி நோட்டீஸ் அனுப்ப முடியும்? இந்த கேள்வியை சட்டசபை அல்லது பாராளு மன்றத்தில் தான் எழுப்ப முடியும். அல்லது அமைச்சர்களை பொது மக்களோ, மீடியாக்களோ தான் கேள்வி கேட்க முடியும். கோர்ட்டுகள் தேவை இல்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்து நேரத்தை வீணாக்குகிறார்கள். அதனால் தான் வழக்குகளில் தீர்ப்பு சொல்லாமல் இழுத்து அடிக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
18-ஜன-202011:14:27 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே அய்யா, அதிரடியாக பல கால மாற்றத்திற்க்கு ஏற்றார் போல பல தீர்ப்புகளை கொடுத்துவரும் நீதித்துறை எப்போது அதிரடியாக மாற போகிறது ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X