சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'வம்பை விலை குடுத்து வாங்குறாங்களே!

Added : ஜன 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
'வம்பை விலை குடுத்து வாங்குறாங்களே!

'வம்பை விலை குடுத்து வாங்குறாங்களே!'

பா.ஜ., மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசன், கோவைக்கு வந்தார். அப்போது, நிருபர்களிடம் அவர், 'தமிழர்களின் அடையாளம், திருக்குறள். மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும், திருக்குறளில் உள்ளது. சமஸ்கிருதத்தை விட, மிகவும் பழமையான மொழி, தமிழ் என, பிரதமர் மோடியே கூறியுள்ளார். அவர், தமிழ் மொழியை கற்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறி இருக்கிறார். தாய் மொழி, கண்களை போன்றது. மற்ற மொழிகள், கண்ணாடி போன்றது.'திருவள்ளுவர் காவி நிறத்தில் தான் உடை அணிந்து இருந்தார். அதை, வெண்ணிறமாக மாற்றியோர், தி.மு.க.,வினர். அதைத் தான், நாங்கள் தற்போது பழைய நிலைக்கு மாற்றி இருக்கிறோம். ஸ்டாலினுக்கும், திருவள்ளுவருக்கும் என்ன சம்பந்தம் உள்ளது; அவர், இதை பற்றி ஏன் பேச வேண்டும்?' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'உண்மையைப் பேசுறதா நினைச்சு, இவங்க ஏதோ சொல்ல வர்றாங்க... வம்பை விலை குடுத்து வாங்குறாங்களே...' என்றபடி, கிளம்பினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
18-ஜன-202006:07:04 IST Report Abuse
D.Ambujavalli திருவள்ளுவரை இவர் நேரில் பார்த்தாரா? அவர் காவிதான் கட்டியிருந்தார் என்று இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே வெங்கையா அது ஊழியரின் தவறு என்று மாற்றிய பின்னும் இவர் தொடர்வதை பார்த்தால், தலைமைக்கு எவ்வளவு மதிப்பளிக்கிறாரென்று தெரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X