சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

கடிவாளம் போட முடியுமா?

Added : ஜன 17, 2020
Share
Advertisement
கடிவாளம் போட முடியுமா?

சர்ச்சைக்குரிய, பா.ஜ., - எம்.பி.,யான பிரக்யா சிங் தாக்குரின் அதிரடி அரசியலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் கதி கலங்கி போயுள்ளனர், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் பிரமுகர்கள்.மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியில் வந்தவர், பிரக்யா. கடந்த லோக்சபா தேர்தலில், ம.பி., தலைநகர் போபால் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கை தோற்கடித்தார்.இவர், எப்போதுமே சர்ச்சைக்குரிய வகையில் தான் பேசுவார். பார்லிமென்டாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்டமாக இருந்தாலும் சரி; பிரக்யாவின் அணுகுண்டு பேச்சு, எதிர்க்கட்சியினரை அலற வைத்து விடும்.சர்ச்சைக்குரிய பேச்சுக்காக, பா.ஜ., மேலிட தலைவர்கள், பலமுறை இவருக்கு கண்டனம் தெரிவித்தும், அவர் அடங்குவதாக தெரியவில்லை.இதனால், தேசிய அளவில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கும், ம.பி., அரசியலில் கவனம் செலுத்தும்படி, பா.ஜ., மேலிடம் அவரை வலியுறுத்தியது.இதையடுத்து, சமீபகாலமாக, மத்திய பிரதேசத்திலேயே முகாமிட்டுள்ளார் பிரக்யா. இவரது தொகுதியும் ம.பி.,யில் இருப்பதால், அவருக்கு வசதியாக போய் விட்டது.முதல்வர் கமல்நாத்தின் செயல்பாடுகள், அவரது ஆட்சியின் குறைகள், திட்டங்கள் ஆகியவற்றை கடுமையாக விமர்சித்து, நாள் தோறும் பேசி வருகிறார் பிரக்யா. இவருக்கு கடிவாளம் போட வழி தெரியாமல் தவித்து வருகின்றனர், ம.பி., மாநில காங்கிரஸ் கட்சியினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X