பொது செய்தி

இந்தியா

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் அனைத்து கேள்விக்கும் பதில் கட்டாயமில்லை

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (19)
Advertisement
தேசியமக்கள்தொகைகணக்கெடுப்பு, கேள்வி, பதில், கட்டாயமில்லை

புதுடில்லி: 'தேசிய மக்கள் தொகை பதிவேடு பட்டியல் தயாரிப்பின் போது கேட்கப்படும் கேள்விகள் அனைத்துக்கும், பதில் அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை' என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் 2021க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு, வரும், ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை, நாடு முழுவதும் நடைபெற உள்ளது.இதில் பின்பற்றப்பட உள்ள நடைமுறைகள் பற்றி, அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கம் அளிக்கும் மாநாடுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில், பல்வேறு மாநில தலைமை செயலர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர்கள் பங்கேற்றனர். மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மாநாட்டை துவக்கி வைத்தார்.இதில், பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள், பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

தேசிய மக்கள் தொகை பதிவேடு பட்டியல் தயாரிப்பின் போது, பின்பற்றப்படும் நடைமுறை குறித்து, எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.அதில் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள், 'பதிவேடு பட்டியல் தயாரிப்பில், அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை' என தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
18-ஜன-202017:04:01 IST Report Abuse
J.Isaac வீடுகள் இன்றி பிளாட்பார்மிலும் பேருந்து , ரயில் நிலையங்களிலும் ஷெட்டூகளிலும் வாழ்கிறவர்களிடம் எப்படி விவரம் சேகரிப்பார்கள்.
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
18-ஜன-202022:28:26 IST Report Abuse
uthappaதங்கும் வீடில்லை என்று சொல்ல வேண்டும், அரசு காப்பகத்திற்கு அனுப்பும்.தங்கும் வீடில்லாதவர்கள் ரேஷன் கார்டில் உள்ள விலாசத்தை கொடுக்கலாம்.மேலும் வாக்குசீட்டு இருப்பதை தெரிவிக்கலாம்.பிறநத ஊரையே குறிக்கலாம்....
Rate this:
Share this comment
Cancel
Dhanush - Tirunelveli,இந்தியா
18-ஜன-202016:25:32 IST Report Abuse
Dhanush சராசரி குடிமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்குவது அவசியம்
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
18-ஜன-202014:39:49 IST Report Abuse
Ab Cd அனைத்து கேள்விக்குமே பதில் அளிக்க வேண்டிய கட்டாயமில்லை பின்ன என்னத்துக்கு இந்த கணக்கெடுப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X