பொது செய்தி

இந்தியா

கலவர பாதிப்புக்கான நிதி: இனி ஆதார் கட்டாயம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (1)
Advertisement
கலவரம், பாதிப்பு, நிதி, ஆதார், கட்டாயம்

புதுடில்லி : பயங்கரவாதிகள், நக்சல்கள் நடத்தும் தாக்குதல்கள் மற்றும் ஜாதி கலவரங்களால் பாதிக்கப்படுவோர் மத்திய அரசின் நிதியுதவியை பெற ஆதார் அட்டை அவசியம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:பயங்கரவாத தாக்குதல்கள், வகுப்புவாத கலவரம், எல்லைத் தாண்டி நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு, கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களால் பாதிக்கப்படுபவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு பல்வேறு நிதியுதவிகளை அளிக்கிறது.

இந்த நிதி மாநிலஅரசுகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்படுகிறது. மாநில அரசுகளிடம் இருந்து கோரிக்கைகளைப் பெற்று மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான நிதியை ஒதுக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ஏழு கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தில் கீழ் நிதி உதவி பெற இனி ஆதார் அட்டைஅவசியம்.

பாதிக்கப்பட்ட நபரிடம் ஆதார் அட்டை இல்லாவிட்டால் அவர்கள் உடனடியாக ஆதார் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.குறிப்பிட்ட பகுதிகளில் ஆதார் சேர்க்கை மையங்கள் இல்லாவிட்டால் இந்த திட்டத்தை அமல்படுத்தும் துறை அதற்கான வசதிகளை பயனாளிகளுக்கு செய்து கொடுக்கவேண்டும்.

ஆதார் அட்டை பெறும் வரை தபால் அலுவலக பாஸ்புக், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், விவசாயிகளுக்கான கிசான்அட்டை, மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாயப்பு திட்டத்தின் அட்டை உள்ளிட்ட மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம். இந்த அறிவிப்பு அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும்யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
18-ஜன-202005:48:58 IST Report Abuse
blocked user அதாவது இவ்வளவு நாளும் அடையாளம் கூட உறுதி செய்யாமல் உதவி பெற்று இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X