பொது செய்தி

தமிழ்நாடு

இட நெருக்கடியில் திண்டிவனம் மீன் மார்க்கெட்

Added : ஜன 17, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில், இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட், நகரத்தின் மைய பகுதிக்கு மாற்றுவதற்கு நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் மேம்பாலத்தையொட்டியுள்ள ஓ.பி.ஆர்., பார்க் அருகே நகராட்சி மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு, நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது.மீன்மார்க்கெட் பகுதியில் மீன் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. குறிப்பாக வெளி மாநிலங்களிலிருந்து வாகனங்களில் கொண்டு வரப்படும் மீன்கள், மார்க்கெட்டிற்கு உள்ளே வரமுடியாத அளவிற்கு குறுகிய சாலையில் மார்க்கெட் அமைந்துள்ளது.

மார்க்கெட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடம், குறைவாக இருப்பதால், மீன்களை சுத்தம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் போதுமானதாக இல்லை. மேலும், மீன் மார்க்கெட்டில், வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை.நகராட்சி மீன் மார்க்கெட் பகுதியில் இடப்பற்றாக்குறை இருப்பதால், அதிக அளவில் மீன் வியாபாரிகள் மார்க்கெட்டில் அமர்ந்து மீன்கள் விற்பனை செய்ய முடிவதில்லை.

இதனால் மீன் வியாபாரிகள் பலர், ரோஷணை, அங்காளம்மன் கோவில், ஆஸ்பிட்டல் ரோடு பழைய நகராட்சி அலுவலகம், மரக்காணம் ரோடு என பல்வேறு இடங்களில் சாலையோரம் ஆக்கிரமித்து மீன் கடைகளை போட்டு, சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.திண்டிவனம் நகர பகுதியில், விசாலமான இடத்தில் தனியாக மீன் மார்க்கெட் அமைத்து தர வேண்டும் என்று, நகர மக்கள் சார்பில் நீண்ட காலமாக நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திண்டிவனம் உழவர் சந்தை அருகே உள்ள இடம், செஞ்சி ரோடு தண்ணீர் டேங்க் அருகே உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம், அவரப்பாக்கத்தில் நகராட்சிக்கு சொந்தமான இடம் என பல இடங்களில் மீன்மார்க்கெட் வைப்பதற்கு இடம் உள்ளது. இதில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால், அனைத்து மீன் வியாபாரிகளும் ஒரே இடத்தில் அமர்ந்து விற்பனை செய்ய முடியும்.தற்போது நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மீன் அங்காடி, பூ மார்க்கெட்டிற்கு பக்கத்தில் இருப்பதால், பொது மக்களுக்கு இடையூறாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, நகரத்தின் மைய பகுதியில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X