பொது செய்தி

தமிழ்நாடு

வாலிபால் போட்டி: பரிசளிப்பு விழா

Added : ஜன 17, 2020
Share
Advertisement

மந்தாரக்குப்பம் : யங் ஸ்டார் வாலிபால் அணி சார்பில் நடந்த விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

யங் ஸ்டார் வாலிபால் நடத்தும் 10 ம் ஆண்டு வாலிபால் போட்டி என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் நெய்வேலி, கருங்குழி, மேட்டுக்குப்பம், ஊமங்கலம், முதனை, மருவாய், பண்ருட்டி, உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன.நெய்வேலி யங் ஸ்டார் அணி முதல் பரிசையும், பழைய நெய்வேலி பிளாக் கோர்ஸ் பகுதியை சேர்ந்த அணி இரண்டாம் பரிசை , குறவன்குப்பம் பிரண்ட்ஸ் அணி மூன்றாம் பரிசையும் வென்றன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.த.வா.க., ஒன்றிய செயலர் கொளஞ்சிநாதன், மாவட்ட துணை செயலர் ரவி, மகாலட்சுமி தியேட்டர் துரைராஜ், மணி, ஸ்ரீராமுலு, துரைபாண்டி, தில்லைநாதன், சரவணன், ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X