எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளை பிடிக்க என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (4)
Advertisement
பயங்கரவாதிகள், என்.ஐ.ஏ., தேடுதல், வேட்டை

குடியரசு தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டுள்ள பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை, அம்பத்துார் அடுத்த மண்ணுார்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 47. இவர், திருவள்ளூர் மாவட்ட, ஹிந்து முன்னணி தலைவராக இருந்தார். இவரை, 2014ல், மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்தனர்.இந்த கொலை வழக்கில், சென்னை, கடலுார், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஜாமினில் வெளிவந்த சையது அலி நவாஸ், 25, அப்துல் ஷமீம், 25, காஜா மொய்தீன், 47, ஆகியோர் தலைமறைவாகினர். இவர்களை, தமிழக, 'கியூ' பிரிவு போலீசார், தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பெங்களூரில் பதுங்கி இருந்த, இவர்களின் கூட்டாளிகள் முகமது ஹனீப் கான், 29, இம்ரான் கான், 32, முகமது ஜெயித், 24, ஆகியோரை கைது செய்தனர். பின், பெங்களூருவில் கார் ஓட்டுனராக பதுங்கி இருந்த இஜாஸ் பாஷா, 46, என்பவரையும் கைது செய்தனர். அதேபோல, டில்லியில் பதுங்கியிருந்த, காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் இருவரை, அம்மாநில போலீசார் கைது செய்தனர்.பயங்கரவாதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால், போலீசார் மீது ஆத்திரமடைந்த அப்துல் ஷமீம், 25, தவுபீக், 27, ஆகியோர், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில், சிறப்பு எஸ்.ஐ., வில்சன் என்பவரை சுட்டுக் கொன்றனர். இதையடுத்து நடந்த தேடுதல் வேட்டையில், கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருந்த, அப்துல் ஷமீம், தவுபீக் கைது செய்யப்பட்டனர்.இவர்களில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட, ஹனீப் கான் உள்ளிட்ட, மூன்று பேர் மற்றும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட லியாகத் அலி ஆகியோரை, தமிழக கியூ பிரிவு போலீசார், 10 நாட்கள் காவலில் எடுத்து, விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் அளித்துள்ள வாக்குமூலம்:எங்களுடன் சேர்ந்து, 14 பேர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன், நேரடி தொடர்பில் இருந்தோம். எங்களுக்கு, பெங்களூரில் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இலங்கையை போன்று, குடியரசு தினத்தன்று, குஜராத், டில்லி மற்றும் உ.பி., உள்ளிட்ட மாநிலங்களில், குண்டுவெடிப்பு நடத்த சதி திட்டம் தீட்டினோம். அதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டு வந்தோம். குண்டு வெடிப்பு நிகழ்த்திய பின், பாகிஸ்தானுக்கு தப்பி விடவும் முடிவு செய்திருந்தோம். இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.இதுவரை, எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள, ஆறு பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், தீவிரமாக தேடி வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-ஜன-202010:19:25 IST Report Abuse
RajanRajan சுடலை கனி குருமா சீமான் வைக்கோன் முருகன் எங்கேயடா இவிகளை. பொழுது சாய்ஞ்சுட்டு இன்னும் குல்லாவுக்கு வக்காலத்து வாங்கி கஞ்சி காய்ச்ச வர காணோமே. ஓ இன்னும் மார்க்கத்தின் கட்டிங் வரல்லியோ அதுக்கு தான் காத்துகிட்டு இருக்கிறாங்களோ. உசார் முருவா தமிழகம் அமைதி பூங்கவிலே இருந்து பயங்கரவாதிகள் உலாத்துறாங்க.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
18-ஜன-202005:52:50 IST Report Abuse
blocked user தமிழகத்தில் இப்படி இந்து முன்னணி பிரமுகர்களை கொலை செய்தது அனைத்தும் இது போன்ற தீவிரவாதிகளே. ஆனால் அந்த வழக்குக்கள் அனைத்திலும் மணல் கொள்ளை, பெண்கள் பிரச்சினையில் முன்விரோதம் போன்ற பொய்களை சொன்ன சோரம் போன காவல் அதிகாரிகளை முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே போட்டு விசாரிக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
18-ஜன-202016:48:51 IST Report Abuse
Darmavanபோலீசை இப்படி மாற்றி கேஸ் போட வைத்தது யார்.அவர்களுக்கு என்ன தண்டனை.இதை எதிர்த்து ஏன் கொலை செய்யப்பட்டவர் சார்பில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை.உண்மை என்ன....
Rate this:
Share this comment
Cancel
ஷேக் அப்துல்லா டெரரிஸ்ட் கையேடு படித்தால் புத்தி இப்படிதான் வேலை செய்யும். காபிர்களை ஒழிக்கிறேன் என்று கிளம்பிவிடுவான்கள். மூர்க்கன் எவனும் இந்த பக்கம் கருத்து சொல்ல வரமாட்டான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X