'நிர்பயா' குற்றவாளிகளுக்கு பிப்.1ல் தூக்கு: கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (7+ 88)
Advertisement
நிர்பயாகுற்றவாளிகள், தூக்கு, கருணைமனு,ஜனாதிபதி, நிராகரிப்பு,

புதுடில்லி: மருத்துவ மாணவி 'நிர்பயா' வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கு பிப். 1ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. தண்டனை நிறைவேற்றப்படுவதை இழுத்தடிக்க கடைசி முயற்சியாக குற்றவாளி அளித்த கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார்.

டில்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி 2012 டிசம்பரில் ஆறு பேர் அடங்கிய கும்பலால் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு வெளியே துாக்கி வீசப்பட்டார். இதில் பரிதாபமாக அந்த மாணவி உயிரிழந்தார்.இது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் 'மைனர்' என்பதால் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பின் விடுவிக்கப்பட்டான். மற்றவர்களுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த துாக்கு தண்டனையை டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.அவர்களில் ராம் சிங் என்பவர் திகார் சிறையில் தற்கொலை செய்தார்.

எஞ்சிய முகேஷ் குமார் 32, வினய் சர்மா 26,அக் ஷய் குமார் சிங் 31, பவன் குப்தா 25 ஆகிய நான்கு பேரின் துாக்கு தண்டனையை 2017ல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.இதை எதிர்த்து நான்கு பேரும் தாக்கல் செய்த சீராய்வு மனு 2018ல் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து நான்கு பேருக்கும் வரும் 22ம் தேதி அதிகாலை 7:00 மணிக்கு திகார் சிறையில் துாக்கு தண்டனையை நிறைவேற்ற 'வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் வினய் சர்மாவும் முகேஷ் குமாரும் துாக்கு தண்டனையை ரத்து செய்யும் கடைசி முயற்சியாக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து துாக்கு தண்டனையை நிறைவேற்ற பிறப்பிக்கப்பட்ட 'வாரன்ட்'டை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் முகேஷ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடியானது.ஜன. 22ல் துாக்கு தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் குற்றவாளி முகேஷ்குமார் சார்பில் துாக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி டில்லி மாநில அரசுக்கும் ஜனாதிபதிக்கும் கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.

கருணை மனுவின்மீது ஜனாதிபதி முடிவெடுத்த பின் 14 நாட்கள் இடைவெளிக்கு பிறகே துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியும். இதனால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட வாரன்ட் படி துாக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாத நிலை உருவானது.

இந்நிலையில் கருணை மனுவை தள்ளுபடி செய்த டில்லி அரசு அதை நிராகரிக்க பரிந்துரை செய்து கவர்னர் அனில் பஜாஜுக்கு அனுப்பியது. அவரும் அதை தள்ளுபடி செய்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பினார்.நேற்று காலை மத்திய உள்துறை அமைச்சகம் முகேஷ் குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி அலுவலகத்துக்குஅனுப்பியது. முகேஷ் குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நிராகரித்தார்.

இந்நிலையில் கருணை மனுவை காரணம் காட்டி துாக்கு தண்டனையை தள்ளி வைக்கக் கோரி முகேஷ் குமார் தாக்கல் செய்த மனு டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றநீதிபதி சதிஷ் குமார் அரோரா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றவாளியின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தது குறித்து மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நான்கு குற்றவாளிகளுக்கும் துாக்கு தண்டனையை நிறைவேற்ற புதிய வாரன்ட் பிறக்கக் கோரி திகார் சிறை நிர்வாகம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.'நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரின் துாக்கு தண்டனையை பிப்.1ம் தேதி அதிகாலை 6:00 மணிக்கு நிறைவேற்ற வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.


சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் மனுநிர்பயா குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள் ளதாவது: கடந்த 2012ல் குற்றம் நிகழ்ந்த போது சிறுவன் என்பதற்கான சட்டபூர்வ வயது வரம்பிற்குள் நான் இருந்தேன். அதனால் என் மீது சிறுவர் குற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் தான் வழக்கு தொடுத்து தண்டனை வழங்க முடியும். ஆனால் டில்லி உயர்நீதிமன்றம் இதை ஏற்காமல் தள்ளுபடி செய்துள்ளது. எனவே டில்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தந்தை வரவேற்பு; தாய் கதறல்முகேஷ் குமாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்ததை நிர்பயாவின் தந்தை வரவேற்றார். ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக கட்சிகள் நாடகமாடுவதாக நிர்பயாவின் தாய் ஆஷா தேவி குற்றஞ்சாட்டியுள்ளார்.''கடந்த 2012ல் என் மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு போராடிய கட்சிகள் இப்போது குற்றவாளிகளின் துாக்கு தண்டனையை தாமதப்படுத்த முயற்சிப்பது வேதனை அளிக்கிறது'' என ஆஷா தேவி கூறினார்.


சிறையில் ஏற்பாடுதிகார் சிறையில் குற்றவாளிகள் நான்கு பேரும் துாக்கு மேடை அருகே உள்ள சிறை எண் 3ல் தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். நான்கு பேரின் துாக்கு தண்டனையையும் ஒரே நேரத்தில்நிறைவேற்ற வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திகார் சிறை நிர்வாகம் டில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


கட்சிகள் மோதல்கடந்த 2017ல் உச்ச நீதிமன்றம் நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்நிலையில் துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக பா.ஜ. - ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் மோதல் எழுந்துள்ளது.''குற்றவாளிகள் மீதான பரிவால் டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு துாக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்காமல் இரண்டரை ஆண்டுகளாக தாமதப்படுத்தியது'' என மத்திய வனத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து டில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறும்போது ''டில்லியில் சட்டம் - ஒழுங்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது மாநில அரசு எப்படி முடிவு எடுக்க முடியும். இரண்டு நாட்கள் சட்டம் - ஒழுங்கு துறையை எங்களிடம் ஒப்படைத்திருந்தால் நாங்கள் உடனே துாக்கு தண்டனையை நிறைவேற்றியிருப்போம்'' என கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (7+ 88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
18-ஜன-202012:09:15 IST Report Abuse
Ashanmugam KUDOS TO HON'BLE PRESIDENT OF INDIA WHO DISMISSED THE MERCY PETITION OF RAPE MURDERER 'MUKESH' WITHOUT ANY MORAL GROUNDS.
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
18-ஜன-202011:19:34 IST Report Abuse
natarajan s இதில் குறை சொல்லுவது என்றால் நமது உச்ச நீதிமன்றம்தான், இப்படித்தான், ராஜிவ் கொலையாளிகளை ஜனாதிபதி கருணை மனுவை நிராகரித்தபின்பும் " Inordinate and unexplainable delay " என்ற ஒரு வாக்கியத்தை வைத்து அந்த அப்பாவி 7 தமிழர்களுக்கு அவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது இவர்களுக்கும் அது பொருந்தும் என்ற வகையில் இன்னும் மீண்டும் மீண்டும் மனு செய்து கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாட்டின் முன்னாள் பிரதமரை கொன்றவர்களுக்கு கருணை காட்டும் நீதி துறை (மன்னிக்கவும் இதுமாதிரிதான் சினிமாவில் அடிக்கடி வருகிறது ) கேவலம் ஒரு பெண்ணை கற்பழித்து கொன்ற சிறிய குற்றத்திற்கு ஏன் எங்களுக்குமட்டும் commute செய்ய மறுக்கிறது? என்ற எதிர்பார்ப்புடன்தான் இந்த மனு அளிக்கப்படுகிறது. ஒரு முன்னாள் பிரதமரை விடவா இந்த பெண் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற எண்ணோட்டம் இவர்களுக்காக பரிந்து பேசுவோரிடம் உள்ளது என்றே நினைக்கிறன் , மேலும் அடுத்த மாதம் டெல்லியில் தேர்தல், அதுவரை இதை இழுத்தடித்து விட்டால் , இவர்கள் சார்ந்த சமூக வாக்குகளை வாங்கிவிடலாம் என்றும் திரு கேஜரிவால் நினைத்து இருப்பார் .அதுதான் காரணம்.
Rate this:
Share this comment
bala - chennai,இந்தியா
18-ஜன-202014:17:26 IST Report Abuse
balaencounter these criminals...
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-ஜன-202010:23:30 IST Report Abuse
RajanRajan நீங்க நிராகரிப்பீங்க நாங்க அடுத்த மனுவை தாக்கல் பண்ணி இன்னும் பத்து வருசத்துக்கு உங்க தூக்கு கயிற்று கடையை திறந்தே வச்சிருப்போமுல்லே. சும்மாவா ஜனநாயக உரிமை சட்டம் என்பது. நல்ல கை தட்டுங்க விசில் அடிங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X