பொது செய்தி

தமிழ்நாடு

புதிய ஊராட்சி தலைவர்களுக்கு 'செக்': காசோலைகள் பயன்படுத்த அரசு தடை

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (22)
Advertisement
ஊராட்சி தலைவர், செக், காசோலை, அரசு தடை

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, பொறுப்பேற்றுள்ள, ஊராட்சி தலைவர்களுக்கு, 'செக்' வைக்கும் விதமாக , அதிரடி உத்தரவை, அரசு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில் காசோலை முறையை ரத்து செய்து, அரசு உத்தரவிட்டு உள்ளது. எனவே, ஊராட்சி தலைவர்கள் , ஊராட்சி செலவுகளுக்காக இனி காசோலைகளை பயன்படுத்த முடியாது. பொது நிதி மேலாண்மை எனும், ' ஆன்லைன்' வழி பரிவர்த்தனையை மட்டுமே செயல்படுத்தும்நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்று உள்ளனர்.


ரூ.3 லட்சம்ஊராட்சி தலைவர்களிடம் ஊராட்சி பொறுப்பை ஒப்படைக்கும்படி தனி அலுவலர்களுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.கிராம ஊராட்சிகளில் ஊராட்சி பொது நிதி; மத்திய மாநில அரசுகளின் மானிய நிதி; நிபந்தனைக்கு உட்பட்ட மானிய கணக்கு நிதி; மாவட்ட திட்ட நிதி என பல்வேறு நிதி ஒதுக்கீட்டின் கீழ் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன.

ஊராட்சி பொது நிதியில் பொது மக்கள் செலுத்தும் சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, கடைகள், நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் தொழில் வரி ஆகியவற்றின் கீழ் கிடைக்கும் வருவாய் சேர்க்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் மாநில நிதிக் குழு மானிய நிதி ஒவ்வொரு ஊராட்சியின் மக்கள் தொகைக்கேற்ப 20 ஆயிரம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை ஒவ்வொரு மாதமும் ஒதுக்கப்படுகிறது.

இதில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.இது தவிர மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட நிதியில் இந்திரா நினைவு குடியிருப்பு பசுமை வீடு திட்டம் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் ஆகியவற்றுக்கு பணம் செலவிடப்படுகிறது.

ஊராட்சி நிதியில் முறைகேடு செய்வதை தடுக்க நிதி பரிவர்த்தனைகள் பொது நிதி மேலாண்மை அமைப்பின் வழியே செயல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கு பி.எப்.எம்.எஸ். எனப்படும் பொது நிதி மேலாண்மை அமைப்பின் வழியே எவ்வாறு நிதி பரிவர்த்தனை செய்வது என்பதை கற்று கொடுக்கும்படி தனி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


அனுமதிஊராட்சி நிதி நிர்வாகம் பி.எப்.எம்.எஸ். திட்டத்தின் கீழ் வந்துள்ளதால் காசோலைகள் பயன்பாடு அவசியம் அற்றதாகி விட்டது. எக்காரணத்தைக் கொண்டும் ஊராட்சி கணக்குகளின் கீழ் காசோலைகளை பயன்படுத்தக் கூடாது. ஊராட்சி மின் கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்த மட்டும் காசோலைகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஊராட்சிகளில் பி.எப்.எம்.எஸ். திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


10 நாட்கள்எனவே ஊராட்சி செயலர் 'ஆன்லைன்' வழி பண பரிவர்த்தனைக்கான 'பிரின்ட் பேமன்ட் அட்வைஸ்' எனப்படும் பி.பி.ஏ. கடிதத்தை தயாரித்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்; அவர் அதை அங்கீகரிப்பார்.அதன்பின் அந்த கடிதத்தில் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கையொப்பமிட்டு வங்கிக்கு அனுப்ப வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட அந்த கடிதம் பத்து நாட்களுக்கு மட்டும் செல்லுபடியாகும்.

ஊராட்சிகளில் வேலை செய்யும் ஒப்பந்ததாரர் ஜி.எஸ்.டி. வரி செலுத்தி பதிவு செய்திருக்க வேண்டும். அனைத்து பண பரிவர்த்தனைகளும் 'ஆன்லைன்' வழியே நடக்கும். எனவே யாரும் பணத்தை நேரடியாக எடுக்க முடியாது. இந்த திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வர ஓரிரு மாதங்களாகும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-ஜன-202020:38:15 IST Report Abuse
RajanRajan ஆயிரம் ரூபாய் மாத பயணப்படியை தவிர பத்துப் பைசா சம்பளம் இல்லாதது பஞ்சாயத்து தலைவர் பதவி.. ஓட்டுக்கு 500 ம் போஸ்ட்க்கு 5,00000 மும் கொடுத்து அந்த எழவு பதவியை வாங்கி இவர்கள் மக்களுக்காக உழைக்கிற இலட்சணம் இருக்கே... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அப்பனேரியை சேர்ந்த சீதாராமன் எதையோ கூகுளில் தேடிக் கொண்டிருந்த போது e panchayat என்று வர go கொடுத்து உள்ளே போனால் NPPஆப்ஸ். அதாவது National Panchayat Portal. ஆர்வக்கோளாறில் அப்பனேரி என்று அடித்தவருக்கு அதிர்ச்சி..அதிர்ச்சி..அதிர்ச்சி.. ஆம் 13 ஏக்கர் பரப்பளவு கொண்ட அப்பனேரி ஊரணியை 314 Man Power working days தூர் வாரியதாக 50 ஆயிரத்து 649 ரூபாய் வீதம் ஐந்து வருடங்களு க்கு 2,53,245 ரூபாய் ஊராட்சி நிதியிலிருந்து எடுத்திருப்பது தெரிய வந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தில்... உண்மை இதுதான்... அந்த ஊரில் ஊரணியே இல்லை. இல்லாத ஊரணியை தூர் வாரியதைக்கூட ஏத்துக்கலாம் ஆனா அந்த ஊரணிக்கு தண்ணீர் வரத்துக்கு கால்வாய் வெட்டியதாக 2 இலட்சத்து பத்தாயிரம் ரூபாய் ஆட்டய போட்டதை நினைக்கும்போது... ஒரு ஓட்டுக்கு 500 என்ன 5000 கூட கொடுத்து வாங்குவானுக ஆகவே இளைஞர்களே e panchayat NNP ஆப்ஸ்க்கு போங்க. இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த ஊராட்சிகளின் குடுமியும் அங்கே இருக்கு சிந்திப்பீ்ர் செயல்படுவீர் அது நம் அதிகாரம்
Rate this:
Share this comment
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
18-ஜன-202020:20:53 IST Report Abuse
G.Prabakaran யார் யார் கணக்கில் பணம் செலுத்த வேண்டுமோ அதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்க வேண்டும். அரசு கருவூல வழி கூட வேண்டாம் அங்கும் கையூட்டு பெற்றுக் கொண்டுதான் பணம் செலுத்தப் படுத்திகிறது.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஜன-202019:19:16 IST Report Abuse
Sampath Kumar புழுத்து போன அரசியில் நிலைமை இதை சரி செய்ய யாராலும் முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X