டிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (1)
Advertisement
டிரம்புக்கு எதிராக செனட் சபையில் துவங்கியது விவாதம்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், அமெரிக்க செனட் சபையில் துவங்கியது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட, அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.





இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் முயன்று வருகிறார். அவருடைய மகன், ஐரோப்பிய நாடான உக்ரைனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். ஜோ பிடன் மீது பொய் வழக்குகளை தொடரும்படி, உக்ரைனுக்கு, அதிபர் டிரப்ம் நெருக்கடி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதையடுத்து டிரம்ப் மீது கண்டன தீர்மானத்தை, ஜனநாயகக் கட்சி கொண்டு வந்தது. பிரதிநிதிகள் சபையில், சமீபத்தில் இந்த தீர்மானம் வெற்றி பெற்றது. அதையடுத்து, மேல்சபையான செனட்டில் விவாதித்து ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்.இந்நிலையில், டிரம்புக்கு எதிரான கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், செனட் சபையில், வருகிற 21ல் துவங்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த கண்டன தீர்மானத்தின் மீதான விவாதம், செனட் சபையில், நேற்று முன் தினம் துவங்கியது. அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், விசாரணையை துவக்கினார்.
செனட் சபையில், குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியை சேர்ந்த, 100 உறுப்பினர்கள் உள்ளனர். அதில், குடியரசு கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினரை தவிர, மீதமுள்ள 99 உறுப்பினர்கள், சபைக்கு வந்தனர். அவர்களிடம், 'எந்த பாரபட்சமும் இன்றி, கண்டன தீர்மானத்தின் மீது ஓட்டளிப்பீர்களா' என, நீதிபதி கேட்டார். உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தனித்தனியாக கையை உயர்த்தி, 'பாரபட்சமின்றி ஓட்டளிப்போம்' என, உறுதி ஏற்றனர்.இதையடுத்து, செனட் சபையில் விவாதம் துவங்கியது.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
18-ஜன-202005:05:04 IST Report Abuse
blocked user ஒன்றும் ஆகப்போவது இல்லை. இன்னும் ஒரு முறையும் கூட டிரம்ப் தான் ஜனாதிபதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X