பொது செய்தி

இந்தியா

பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்தது ஐ.நா.,

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (7)
Advertisement
பொருளாதாரவளர்ச்சி, கணிப்பு,குறைத்தது, ஐநா, நிதியாண்டு, வளர்ச்சி,இந்தியா

புதுடில்லி: இந்தியாவின், நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்த நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை, குறைத்து அறிவித்துள்ளது, ஐ.நா.,

இது குறித்து, ஐ.நா.,வின், 'உலகபொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் 2020' எனும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவின், நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியை, 7.6 சதவீதம் என்று முன்பு கணித்திருந்ததிலிருந்து குறைத்து, 5.7 சதவீதமாக இருக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி, முன்னர் கணிக்கப்பட்டிருந்த, 7.4 சதவீதத்திலிருந்து,6.6 சதவீதமாக குறைத்து கணிக்கப்பட்டுள்ளது.அத்துடன், அடுத்த நிதியாண்டின் ஆரம்பத்தில், வளர்ச்சி விகிதம், 6.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தேக்கமடையும்

உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். புவிசார்
அரசியல் உள்ளிட்ட எதிர்மறையான சூழ்நிலையில் வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும்,
1.8 சதவீதமாக குறையும்.தனிநபர் வருமானத்தை பொறுத்தவரை, ஐந்து நாடுகளில் ஒரு நாட்டின் தனிநபர் வருமானம்தேக்கமடையும் அல்லது வீழ்ச்சியடையும்.

அதேசமயம், 2020ல், தனிநபர், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், 4 சதவீதத்தை தாண்டக்கூடிய
நாடுகளில், இந்தியாவும் ஒன்றாக இருக்கும்.அமெரிக்காவைப் பொறுத்தவரை, 2019ல் வளர்ச்சி, 2.2 சதவீதத்திலிருந்து, 1.7 சதவீதமாக குறையும்.ஐரோப்பிய ஒன்றியத்தில், தனியார் நுகர்வு வளர்ச்சியால், 2019ல் வளர்ச்சி, 1.4 சதவீதத்திலிருந்து, 1.6 சதவீதமாகஅதிகரிக்க வாய்ப்புள்ளது.சீனாவின் வளர்ச்சி, 2019ல், 6.1 சதவீதமாகவும்; 2020ல், 6 சதவீதமாகவும்; 2021ல்,
5.9 சதவீதமாகவும் இருக்கும்.


முன்னுரிமை

உலகளாவிய பொருளாதார சமநிலை, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகளிலிருந்து சீனா, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளை நோக்கி நகர்ந்து வருவதால், உலகளாவிய பொருளாதார முடிவெடுக்கும் சக்தியும் இடம் மாறுகிறது.கொள்கைகளை
வகுக்கும் இடத்தில் இருப்பவர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து, அதற்கு பதிலாக, சமூகத்தின் அனைத்து
பகுதிகளிலும்நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

இதற்கு கல்வி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தேவையான வளர்ச்சி திட்டங்களில், முதலீட்டிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்தஆய்வறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜன-202014:20:57 IST Report Abuse
ஆப்பு இதெல்லாம் மோடிஜீயின் சாதனை. மத்திய அமைச்சர்கள் எல்லோரும் மக்களுக்கு எடுத்து சொல்லுங்கோ...போங்கோ..
Rate this:
Share this comment
Cancel
Suri - Chennai,இந்தியா
18-ஜன-202013:34:54 IST Report Abuse
Suri நிர்மலாவை இன்னும் ஏன் வைத்திருக்கிறார்கள்??? K V Kamat பெயர் அடிபடுகிறது... பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னா இல்லை பின்பா?? பட்ஜெட் தாக்கல் செய்த கையோடு வீட்டுக்கு அனுப்பப்படும் அசிங்கம் நாம் காண போகிறோம் விரைவில்......
Rate this:
Share this comment
18-ஜன-202015:46:42 IST Report Abuse
ஆப்புவீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க.. கெவுனராப் போடுவாங்க....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜன-202008:12:12 IST Report Abuse
ஆரூர் ரங் உலக பொருளாதார வளர்ச்சியை பொறுத்தவரை, 2020ல், 2.5 சதவீதமாக இருக்கும். வளர்ச்சி, இந்த ஆண்டில் வெறும்,1.8 சதவீதமாக குறையும் அதாவது உலகப்பொருளாதார வளர்ச்சியே சுமார் முப்பது விழுக்காடு குறையும்போது ஒப்பிட்டு நோக்குகையில் அதன் தாக்கம் இங்கு குறைவுதான் இந்தாண்டாவது பருவமழை தாமதமாகாமல் பரவலாகப் பெய்தால் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்
Rate this:
Share this comment
Suri - Chennai,இந்தியா
18-ஜன-202013:39:16 IST Report Abuse
Suriநல்ல மழை பெய்தால் கூட அந்த பலனை கெடுக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள் தான் இப்பொழுது ஆளும் ஆட்சியாளர்கள். ராக்கெட் வேகத்தில் பொருளாதாரத்தை சரித்த பெருமைக்குரியவர்கள் தான் இப்போ நம்மை ஆளும் கொடுப்பினை கொண்டவர்கள்....உண்மை தான் உலக பொருளாதார தாக்கம் பற்றி கவலையே கொள்ளவேண்டாம். நம் ஆட்சியாளர்கள்.. அதை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவர்கள்.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X