பொது செய்தி

இந்தியா

குல்தீப் 100.. ராகுல் 1000... ரோஹித் 7000...

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020
Advertisement
INDvsAUS,teamindia,cricket,viratkohli,KLRahul,KuldeepYadav, RohitSharma,கிரிக்கெட், இந்தியா, ஆஸ்திரேலியா

ராஜ்கோட்: ராஜ்கோட் ஒருநாள் போட்டியில் அசத்திய இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இப்போட்டியில் இந்திய வீரர்கள் குல்தீப், ராகுல், ரோஹித் தனிப்பட்ட சாதனை படைத்தனர்.


100..


நேற்று கேரியை வெளியேற்றிய குல்தீப், ஒருநாள் அரங்கில் தனது 100 வது விக்கெட்டை வீழ்த்தினார்.

* அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முகமது ஷமி (56 போட்டி), பும்ராவுக்கு (57) அடுத்த இடம் பெற்றார் குல்தீப் (58).

* இந்த இலக்கை எட்டிய 22வது இந்திய பவுலர் ஆனார்.

* குறைந்த ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் சாய்த்த சுழற்பந்து வீச்சாளர்களில் ரஷித் கான் (44, ஆப்கன்), சாக்லைன் முஸ்தாக்கிற்கு (53, பாக்.,) அடுத்த இடத்தை இம்ரான் தாகிருடன் ( 58, தெ.ஆப்.,) பகிர்ந்து கொண்டார் குல்தீப் (58).






1000...


லோகேஷ் ராகுல் 64 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் 1000 ரன்கள்(27 இன்னிங்ஸ்) எடுத்தார். கோஹ்லி (24), தவான் (24), சித்துவுக்கு (25) அடுத்து அதிவேகமாக 1000 ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆனார்.






3,000...


கோஹ்லி, தவான் இணைந்து ஒருநாள் அரங்கில் 3000 ரன்கள் எடுத்த 40வது ஜோடி ஆனது. இந்திய அளவில் இந்த இலக்கை எட்டிய 10வது ஜோடி ஆனது.

* ஒட்டுமொத்த அளவில் சிறந்த சராசரி கொண்ட ஜோடியில் ஆம்லா-டிவிலியர்ஸ் (72.34, தெ.ஆப்.,), ரோகித்-கோஹ்லிக்கு (64.06) அடுத்து மூன்றாவது இடம் கோஹ்லி- தவானுக்கு (62.50) கிடைத்தது.






7,000...


ரோகித் சர்மா நேற்று 13 ரன்கள் எடுத்த போது, ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 7000 ரன்கள் எடுத்த முதல் துவக்க வீரர் ஆனார். இவர் 137 இன்னிங்சில் 26 சதம், 31 அரைசதத்துடன் இந்த மைல்கல்லை எட்டினார்.இதற்கு முன் தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, 147 இன்னிங்சில் எடுத்திருந்தார். இந்தியாவின் சச்சின் (160), இலங்கையின் தில்ஷன் (165 இன்னிங்ஸ்), இந்தியாவின் கங்குலி (168), 3, 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளனர்.






11,119...


ராஜ்கோட்டில் 78 ரன்கள் எடுத்த கோஹ்லி, சர்வதேச அரங்கில் கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ஆலன் பார்டரை (11,062 ரன், ஆஸி.,) முந்தி, ஐந்தாவது இடம் பெற்றார். இவர், 171 போட்டியில் 11,119 ரன்கள் எடுத்துள்ளார். முதல் 4 இடத்தில் பாண்டிங் (15,440, ஆஸி.,), கிரீம் ஸ்மித் (14,878, தெ.ஆப்.,), பிளமிங் (11,561, நியூசி.,), தோனி (11,207, இந்தியா) உள்ளனர்.


தவான், ரோகித் காயம்:


கம்மின்ஸ் வீசிய பந்து (9.2வது ஓவர்) சற்று உயரமாக சென்றது. இது, தவானின் வலது பக்க விலா எலும்பில் பலமாக தாக்கியது. உடனடியாக தவான் கீழே சரிந்தார். 'பிசியோதெரபிஸ்ட்' சிகிச்சைக்குப் பின் சகஜ நிலைமைக்கு திரும்பிய தவான், 96 ரன் எடுத்தார். இந்தியா பவுலிங் செய்த போது இவருக்குப் பதில் சகால் பீல்டிங் செய்தார்.

* நவ்தீப் சைனி வீசிய 42.2 வது ஓவரில் ஏகார் அடித்த பந்து பவுண்டரி எல்லைக்கு சென்றது. இதை தடுக்க முயன்ற ரோகித் சர்மா, இடது தோள் பகுதியில் காயம் அடைந்தார். வலியால் துடித்த இவருக்குப் பதில் கேதர் ஜாதவ் பீல்டிங் செய்தார்.


பின்ச் அவுட் சரியா:


ஜடேஜா பந்தில் (15.1வது ஓவர்) பின்ச்சை 'ஸ்டம்டு' செய்தார் லோகேஷ் ராகுல். நீண்டநேரம் 'ரீப்ளே' பார்த்த மூன்றாவது அம்பயர் மைக்கேல் கப் (இங்கிலாந்து), அவுட் தந்தார். விதிப்படி இரண்டு 'பைல்சும்' ஸ்டம்சை விட்டு பிரிந்திருக்க வேண்டும். ஆனால், 'பைல்ஸ்' பிரியாத நிலையில், ஸ்டம்சில் எரிந்த 'எல்.இ.டி.,' வெளிச்சத்தை வைத்து அவுட் ஆனதாக அறிவித்து தவறு செய்தார்.


113..


ஒருநாள் அரங்கில் இந்தியா 113 வது முறையாக 300 ரன்னுக்கும் மேல் சேர்த்தது. ஆஸ்திரேலியா (107), தென் ஆப்ரிக்கா (84), பாகிஸ்தான் (81), இங்கிலாந்து (78) அடுத்த இடங்களில் உள்ளன.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X