அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பங்கேற்பு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (3)
Advertisement
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., பங்கேற்பு

சென்னை:அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது.

சென்னையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர், நேற்று காலை, 10:00 மணிக்கு, மாலை அணிவித்தனர்; மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பின், அருகில் உள்ள, ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, மலர் துாவினர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், சாக்லெட், லட்டு என, இனிப்பு வகைகளை வழங்கினர். விழாவில், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

தமிழக அரசு சார்பில், சென்னை, கிண்டி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வளாகத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., சிலை கீழே, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, எம்.ஜி.ஆர்., படத்திற்கு, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், மலர் துாவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அ.ம.மு.க., சார்பில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள, எம்.ஜி.ஆர்., சிலைக்கு, அக்கட்சி பொதுச்செயலர் தினகரன், மாலை அணிவித்தார். இரு கட்சிகள் சார்பிலும், அனைத்து மாவட்டங்களிலும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தெருக்களில் ஆங்காங்கே, அவர் படத்தை அலங்கரித்து வைத்து, மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
18-ஜன-202018:27:00 IST Report Abuse
PR Makudeswaran எம் ஜி ஆர் வாயசைத்த ஒரு பாடல். எத்தனை காலம் தான் ஏமாற்றுவர் எந்த நாட்டிலே
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
18-ஜன-202006:01:15 IST Report Abuse
blocked user ஒரு குடும்பமே கட்சியை ஆக்கிரமிக்காமல் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்தி - தங்களை திராவிடக்கட்சியில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். பாராட்ட வேண்டும். யோக்கியர்களாக இருந்து மக்களுக்கு சேவை செய்ய முன்னுரிமை கொடுத்தால் நீண்ட கால அடிப்படையில் கட்சி நிலைத்து இருக்கும். MGR நிச்சயம் சந்தோசமாக இவர்களை ஆசீர்வதிப்பார்.
Rate this:
Share this comment
Ellamman - Chennai,இந்தியா
18-ஜன-202012:41:53 IST Report Abuse
EllammanMGR இவர்களை ஆசீர்வதிப்பாரா????? எப்படி சிரிப்பது இதை கண்டு?? ஊழல் , ஊழல், மேலும் ஊழல் என்றே ஆட்சி செய்யும் இவர்களை யாரும் ஆசீர்வதிக்கமாட்டார்கள், சபித்து பழிப்பார்கள்.....திராவிட கட்சியில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறார்கள்????அட அட அட... என்ன கருத்து???? ஆமாம் ... பகல் கொள்ளைக்கு ஈடாக ஊழல் புரிவதில் மற்ற திராவிட கட்சியில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறார்கள்.. தன்மானம், மானம், ஈனம் போன்ற எந்த சொல்லுக்கும் அர்த்தம் தெரியாமல் வாழ்வது எப்படி என்பதில் இந்த அடிமை கூட்டம் நிச்சயமாக மற்ற திராவிட கட்சியில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறார்கள்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X