ரூ.20 கோடியை திரும்ப பெற கார்த்திக்கு அனுமதி

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (10)
Advertisement
SC,KartiChidambaram,withdraw,Rs20crore,deposit, கார்த்தி, கார்த்தி_சிதம்பரம், சுப்ரீம்கோர்ட், உச்சநீதிமன்றம்

புதுடில்லி: வெளிநாடு செல்வதற்கு பிணைத் தொகையாக, நீதிமன்ற பதிவாளரிடம், 'டிபாசிட்' செய்த, 20 கோடி ரூபாயை திரும்பப் பெற, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.


வெளிநாடு செல்ல தடை:


முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தின் மகன் கார்த்தி, 48. இவர், சிவகங்கை லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இவர் மீது, ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐ.என்.எக்ஸ்., மீடியா ஆகியவற்றில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அமலாக்கத் துறை அறிவுறுத்தலின் அடிப்படையில், அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்தாண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கேட்டு, உச்ச நீதிமன்றத்தில், கார்த்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், 20 கோடி ரூபாயை பிணைத் தொகையாக, 'டிபாசிட்' செய்த பின், வெளிநாடு செல்லும்படி உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அவர், 20 கோடி ரூபாய் டிபாசிட் செய்தார். இதன் பின், வெளிநாடு செல்வதற்கு கார்த்திக்கு அனுமதி அளிக்கப்பட்டது.






உத்தரவு:


இந்நிலையில், வெளிநாடு சென்று வந்ததும், 20 கோடி ரூபாயை திரும்ப அளிக்கும்படி கேட்டு, கார்த்தி சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 20 கோடி ரூபாயை திரும்பப் பெற அனுமதி அளிக்கும்படி, கார்த்தி தரப்பில் கோரப்பட்டது.

அப்போது, மத்திய அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''கார்த்தி, 20 கோடி ரூபாயை திரும்பப் பெறுவதில், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை,'' என்றார். இதையடுத்து, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், கார்த்தி டிபாசிட் செய்திருந்த தொகையை திரும்பப் பெற, அவருக்கு அனுமதி அளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
18-ஜன-202016:40:20 IST Report Abuse
Indhuindian இப்பவாவது உங்க அப்பாவுக்கு சென்னை ஏர்போர்ட்லலே ஒரு கப் காபி வாங்கிக்குடுங்க
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஜன-202015:15:59 IST Report Abuse
Endrum Indian அந்த சைட் பெட்டி போச்சா இந்த சைடுக்கு பணம் வரணும் அது மட்டும் தான் கார்த்தி சிதம்பரத்துக்கு உத்தரவு
Rate this:
Share this comment
Cancel
18-ஜன-202014:44:13 IST Report Abuse
தமிழன் சும்மா வந்த காசுதானே எனக்கு ஒரு கோடி மட்டும் கொடுத்திருப்பா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X