பொது செய்தி

இந்தியா

ஏர் இந்தியா பங்கு விற்பனை; விரைவில் அறிவிப்பு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (8)
Advertisement
AirIndia,ஏர்இந்தியா,விற்பனை,Government,பங்கு

புதுடில்லி: கடும் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ள, ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்கு விற்பனை தொடர்பான அறிவிப்பு, அடுத்த சில தினங்களில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தில், மத்திய அரசு, 76 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. இதை முழுவதுமாக விற்பனை செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவிக்கும் நிறுவனங்களை தேர்வு செய்யவும், மத்திய அரசின் பங்கு விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு, அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வெளியாகும்.





ஏர் இந்தியா, 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. கடந்த நிதியாண்டில், 8,556 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது. தினமும், 20--26 கோடி ரூபாய் இழப்பில் விமான சேவை நடைபெற்று வருகிறது. இருந்தாலும், ஏர் இந்தியாவை மூடும் திட்டம் இல்லை. பங்கு விற்பனை மூலம், நிறுவனம், முழுவதும் தனியார்மயமாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madurai Karan - Madurai,இந்தியா
18-ஜன-202013:03:22 IST Report Abuse
Madurai Karan தயவு செய்து சீக்கிரம் செய்யுங்கள். சேவையும் சரியில்லை, நட்டதிற்கு நம் வரி பணம் வேறு. திறமையில்லாத ஊழியர்களை நீக்கி விட்டு தனியார் மய மாக்குங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
18-ஜன-202011:05:45 IST Report Abuse
Ramalingam Shanmugam air india உருப்பட ஒரு வழி இருக்கிறது 33% ஊழியர்கள் 33 % பொதுமக்கள் 25 % அரசாங்கம் மீதம் வாடிக்கையாளர் என்று இருந்தால் லாபகரமாக நடத்த முடியும் லாபம் சரியாக பகிர்ந்தளிக்கப்படும் ஊழல் ஒழியும் வேலை நிறுத்தம் நடக்காது
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஜன-202015:57:03 IST Report Abuse
தமிழ்வேல் உண்மை, ஊழியர்களுக்கு பங்குகளை விற்பதால் அவர்களுக்கு "கொஞ்சம்" பொறுப்பு வரும். வாங்குவதற்கு ஈர்க்கும் வகையில் "கொஞ்சம்" குறைந்த விலையில் கொடுக்கலாம். இதுபோல் செய்வதுண்டு. மற்ற பங்குகளை தனியாருக்கு, பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்....
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
18-ஜன-202005:02:01 IST Report Abuse
Mani . V இப்பொழுது, ஏர் இந்தியாவின் பங்கு விற்பனை. வெகு விரைவில் இந்தியாவின் பங்கு விற்பனை.
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜன-202007:54:10 IST Report Abuse
ஆரூர் ரங்உமது சொத்துக்களும் இந்தியா கொடுத்தது தான் எனவே அவற்றை விற்று ஏர் இந்தியாய்வுக்கு உதவி செய்யுங்களேன் ....
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஜன-202007:55:34 IST Report Abuse
ஆரூர் ரங்நியாயமாகப் பார்த்தால் முந்தைய உரிமையாளர் டாடாவிடம் திரும்பக் கொடுக்கவேண்டும் .தேசீய நலன் எனறு சொல்லிக்கொண்டு தேசீயமயமாக்கியது நல்லெண்ணத்தில் அல்ல வேண்டியவர்களுக்கு கான்டிராக்ட்களும் வேலையும் போட்டுக்கொடுக்கத்தான் நேரு குடும்பம் தேசீயமயக்கமாக்கியதே...
Rate this:
Share this comment
Fardhikan - Rajakambeeram,இந்தியா
18-ஜன-202011:25:55 IST Report Abuse
Fardhikanசீக்கிரம் சீக்கிரம்...
Rate this:
Share this comment
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
18-ஜன-202013:02:10 IST Report Abuse
pradeesh parthasarathyஅந்த வேண்டியவர்கள் பெயர் அதானி , அம்பானி யா ..?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X