பாழாகும் பிரமாண்ட மாளிகை; பராமரிக்காத மல்லையா

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (7)
Advertisement
Mallya,London,VijayMallya,மல்லையா,விஜய்மல்லையா

லண்டன்: 'அடமானம் வைத்துள்ள பிரமாண்ட மாளிகையை, விஜய் மல்லையா வேண்டுமென்றே பராமரிக்காமல், அதன் மதிப்பை குறைத்துள்ளார்' என, அவருக்கு கடன் கொடுத்த, கத்தார் தேசிய வங்கியின் துணை நிறுவனமான, அன்ஸ்பச்சர் குற்றஞ்சாட்டியுள்ளது.

தொழிலதிபர் விஜய்மல்லையா, இந்திய வங்கிகளிடம் பெற்ற, 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்பச் செலுத்தாமல், லண்டனுக்கு தப்பியோடி விட்டார். அவரை, நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, அடுத்த மாதம் லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், விஜய் மல்லையா, 2008ல், பிரான்ஸ் நாட்டின், 'லி செயின்ட் மார்கரெட்' தீவில் வாங்கிய பிரமாண்ட மாளிகையின் கடன் நிலுவை தொடர்பான வழக்கு, லண்டன் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அன்ஸ்பச்சர் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியதாவது: விஜய் மல்லையா, எங்கள் நிறுவனத்திடம், 280 கோடி ரூபாய் கடன் வாங்கி, பிரான்சில், 'லி கிராண்ட் ஜார்டின்' மாளிகையை வாங்கினார். 17 படுக்கை அறைகள், ஒரு திரையரங்கு, மதுபானக் கூடம், ஹெலிகாப்டர் தளம் உள்ளிட்ட வசதிகள் அதில் உள்ளன. இந்த மாளிகையை, விஜய் மல்லையா வேண்டுமென்றே பராமரிக்காமல் விட்டு விட்டார். தகுதியற்ற ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில மராமத்து பணிகளால், மாளிகை மேலும் பாழாகி விட்டது.





அதனால், மாளிகையின் மதிப்பு, 30 சதவீதம் குறைந்து விட்டது. இதன் காரணமாக, மாளிகையை விற்றாலும், கடன் தொகையை முழுவதும் வசூலிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், விஜய் மல்லையா, கடனுக்கு உத்தரவாதமாக வழங்கிய, பிரிட்டனில் உள்ள சொகுசு படகை விற்று, அத்தொகையை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனிடையே, சொகுசு படகில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, விஜய் மல்லையா ஊதியம் தராததால், காப்பீட்டு நிறுவனம், படகை முடக்கி வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
19-ஜன-202016:47:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni கொள்ளைஅடிச்சுக்காட்டினானுக உளைச்சகாசுன்னா மனம் பதறும் இப்போது பிரான்ஸ் செய்யவேண்டியது இந்த மாளிகையை பிடுங்கிக்கவேண்டும் நமது அரசுக்கும் இந்தகொள்ளையன் கட்டிய சொத்து தேவையே இல்லே
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
18-ஜன-202022:19:25 IST Report Abuse
oce முற்கால யோகம்.பிற்கால அவஸ்தை. அவர் ஜாதக பலன் மற்றும் முன் ஜென்ம கர்ம வினைகள் அப்படி. அதற்கு யார் என்ன செய்ய முடியும். வினை விதைப்பவன் வினை அறுப்பான். தினை விதைப்பவன் தினை அறுப்பான்.
Rate this:
Share this comment
Cancel
SUBRAMANIAN P - chennai,இந்தியா
18-ஜன-202017:34:44 IST Report Abuse
SUBRAMANIAN P இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X