அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு | Dinamalar

அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (77)
Share
America,US,hindi,AmitKumar,அமெரிக்கா, இந்தி, ஹிந்தி

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன், அமெரிக்காவில், ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர், ஹிந்தி மொழியில் பேசுவதாக, மூத்த இந்திய துாதர் அமித் குமார் தெரிவித்தார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய துாதரகத்தில், 'விஸ்வ ஹிந்தி திவஸ்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமித் குமார் பேசியதாவது: அமெரிக்காவில், ஹிந்தி மொழி பலரால் பேசப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இங்குள்ள, பள்ளிகள் உள்ளிட்ட பல இடங்களில், ஹிந்தி மொழி கற்றுத் தரப்படுகிறது. ஏ.சி.எஸ்., எனப்படும், அமெரிக்க சமூக ஆய்வில், அமெரிக்காவில் ஹிந்தி மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை, ஒன்பது லட்சத்துக்கும் மேல் அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.


latest tamil news



சர்வதேச அரங்கில், மிக முக்கிய நாடாக, இந்தியா உருவெடுத்து வருகிறது. இதனால், ஹிந்தி மொழியை பயில, பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்திய துாதரகத்தில் நடத்தப்படும், இலவச ஹிந்தி பயிற்சி வகுப்புகளுக்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X