சென்னை: இலங்கையில் ஹிந்து கோயில்களை இஸ்லாமியர்கள் தீ வைத்து எரிப்பதாக கவிஞர் காசி ஆனந்தன் வருத்தம் தெரிவித்தார்.

இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வலியுறுத்தி நடத்தப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர் காசி ஆனந்தன் பேசியதாவது: இலங்கையில், எங்களால் வாழ முடியவில்லை. இது எங்கும் பதிவு செய்யப்படாத ஒரு செய்தி. இல்லையென்றால் நான் திசைதிருப்புகிறேன் என்று கூட வெளியில் பேசுவார்கள். இலங்கையில் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சமீப காலத்தில், 12 ஹிந்து கோயில்களை இஸ்லாமியர்கள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. கிராமத்தோடு நெருப்பு வைத்து எரித்ததால், ஹிந்து மக்கள் ஓடுகின்றனர்.
தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் தோன்றியதற்கு முந்தைய காலமான கி.பி., 4ம் நூற்றாண்டில், உலக நாச்சியார் என்ற தமிழ் அரசி, மட்டக்களப்பு மாவட்டம் கோவில் குளம் என்ற ஊரில் ஹிந்து கோயிலை கட்டினார். மிகவும் பழங்கால கோயிலான இதை, கடந்த 4 நாட்களுக்கு முன், இஸ்லாமியர்களை இடித்து நொறுக்கி, கோவிலிலிருந்த லிங்கத்தை எடுத்து எரிந்துள்ளனர். 20 கோயில்கள் வரை அங்குள்ள ஊர்களில் எரிக்கப்பட்டுள்ளன. சிங்களர்கள் செய்வது ஒருபக்கம். மற்றொரு பக்கம் முஸ்லிம்கள். இரு பக்கமும் அடிவாங்கும் மத்தளமாக அந்த மண்ணில் ஹிந்துக்கள் மடிந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.